Breaking News

இலங்கை மற்றும் உலக வங்கிக்கும் இடையில் இணக்கம்!

 


வரவு செலவுத் திட்டத்திற்கு தேவையான நிதியை பெறுவதற்காக இலங்கைக்கும் உலக வங்கிக்கும் இடையில் இணக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்த உடன்படிக்கையின் கீழ் இலங்கைக்கு உலக வங்கியிடமிருந்து 500 மில்லியன் டொலர் நிதி கிடைக்கவுள்ளது.

குறித்த நிதியைப் பெறுவதற்கு அமைச்சரவையின் அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளது.

கடந்த மார்ச் மாதம் சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்குவதற்கு ஒப்புக் கொள்ளப்பட்ட 2.9 பில்லியன் டொலர் கடன் வசதியின் பின்னர் நாடு பெற்றுள்ள மிகப் பெரிய நிதி உதவி இதுவாகும்.

இலங்கைக்கு 700 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளதாக கடந்த வாரம் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, மீதமுள்ள 200 மில்லியன் டொலர் சமூக பாதுகாப்பு திட்டத்திற்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.