அடிக்கடி நெட்டி முறிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்!
பொதுவாக நம்மில் பலருக்கு விரல்களை அடிக்கடி நெட்டி முறிக்கும் பழக்கம் இருக்கும். உண்மையில் இது தவறான பழக்கம் ஆகும். ஏனெனில் அது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
வேலை செய்துகொண்டிருக்கும்போதே விரல்கள், கழுத்து, இடுப்பு போன்ற பகுதிகளை வளத்து `சொடக்கு' எடுக்கும் வழக்கம் பலருக்கும் இருக்கும். இதை `நெட்டி முறித்தல்', உடல் முறித்தல் என்றெல்லாம் சொல்வார்கள் நெட்டி முறிக்கும்போது சொடக்கு சத்தம் வெளிப்பட்டதும் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி கிடைத்ததுபோல உணர்வார்கள். தொடர்ச்சியாக நெட்டி முறிப்பது ஆரோக்கியமான பழக்கமல்ல.
விரல் எலும்புகளின் இணைப்புகளுக்கு இடையே சைனோவியல் என்கிற திரவம் சுரக்கும். இதுதான் மூட்டு எலும்புகள் உரசாமலிருக்க எண்ணெய் போல செயல்படுகிறது. நீண்டநேரம் அசையாமலிருந்தால் குறிப்பிட்ட பகுதியின் எலும்புகளுக்கு இடையே இந்த திரவம் மொத்தமாக சேர்ந்துவிடும். நெட்டி முறிக்கும் போது எலும்பு இணைப்புகள் விரிவடைவதால் அதனுள் சேர்ந்திருக்கும் திரவம் வேகமாக நகரும்போது சொடக்கு சத்தம் வெளிப்படுகிறது.
தூக்கத்தின்போது உடல் அசைவு மிகக்குறைவாக இருப்பதால் தூங்கி எழுந்ததும் நெட்டி முறித்தால் சொடக்கு சத்தம் அதிகமாக இருக்கும். நெட்டிமுறிக்கும் போது ஏற்படும் இந்த சத்தம் தான் பலரை மீண்டும் மீண்டும் அதை செய்யத்தூண்டுகிறது.
ஏற்படும் பாதிப்புகள்
* 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் நிறைய பேர் நெட்டி முறித்தால் அவர்களுக்கு பிடி வலிமையின்றிப் போவது முழங்கால் வீக்கம், தசைநார் பாதிப்பு போன்றவை ஏற்படலாம்.
* விரல்களை மீண்டும் மீண்டும் நெட்டி முறிப்பது எலும்பு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
* அடிக்கடி நெட்டி முறிக்கும் போது ஏற்படும் சத்தம் எலும்பு பிரச்சனையின் அறிகுறியாகும். எனவே இவற்றை தவர்ப்பது நல்லது.
* நீண்ட நேரம் விரல்களை நெட்டி முறிப்பது கையின் பிடியின் வலிமையை பாதிப்பதோடு, கைகளில் வீக்கத்தையும் ஏற்படுத்தும்.
* எப்போதாவது நெட்டி முறிப்பதில் தவறில்லை. ஆனால், அதையே பழக்கமாக கொண்டிருந்தால் மூட்டுவலி ஏற்படும் அபாயம் உள்ளது.