Breaking News

உச்சத்தைத் தொட்ட வெங்காயத்தின் விலை!

 


நேற்றைய தினம் (20) கொழும்பு, புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை 520 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இந்தியா வெங்காய இறக்குமதிக்குத் தடை விதித்துள்ள நிலையில், பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளமையே குறித்த விலை அதிகரிப்புக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் ஒரு கிலோகிராம்  பெரிய வெங்காயத்தின் சில்லரை விலை, 700 ரூபாயைத்  தாண்டும் எனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நேற்றைய தினம் பல சில்லறை விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 600 முதல் 650 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.