Breaking News

இலங்கையில் 34 இலட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!

 


பொருளாதார நெருக்கடி காரணமாக 2022 ஆம் ஆண்டிலிருந்து 34 இலட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் வருமானம் குறைவடைந்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

அதன்படி மொத்த குடும்ப அலகுகளில் 60.5 வீத வருமானம் குறைந்துள்ளதாகவும் குறிப்பாக பெருந்தோட்ட துறையில் வருமானம் அதிகமாக குறைந்துள்ளதாகவும், சுமார் 1 இலட்சத்து 70 ஆயிரம் குடும்பங்களின் வருமானம் இவ்வாறு குறைவடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இரண்டாவதாக, கிராமப்புற மக்களின் வருமானம் அதிக வீழ்ச்சியைக் கண்டுள்ளதாகவும், கிராமப்புறங்களில் வசிக்கும் சுமார் 45 இலட்ச குடும்பங்களில் 27 இலட்சம் குடும்பங்களின் வருமானம் குறைந்துள்ளது.

மேலும் நாட்டின் நகர்ப்புற மக்கள் தொகை சுமார் 3.6 மில்லியன் என்றும் இதில் ஏறக்குறைய 9 இலட்சத்து 50 ஆயிரம் குடும்பங்கள் இருப்பதாகவும், அதில் 5 இலட்சம் குடும்பங்கள் வருமானத்தில் சரிவைக் காட்டுவதாகவும் பேராசிரியர் குறிப்பிட்டார்