பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க ஜனாதிபதி தவறியுள்ளார் – சாணக்கியன் விசனம்!
கடந்த இரண்டு வருடமாக தங்களின் பிரச்சினைக்கு தீர்வினை தருவதற்கு ஜனாதிபதி தவறியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அதிகளவாக பணியாற்றவதன் காரணமாகவே தான் அதிக விமர்சனங்களை எதிர்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
நேற்று மாலை அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவரும் நிலையில் அது தொடர்பில் அதிக கவனம் செலுத்தாமல், வேறு செயற்பாடுகளில் ஜனாதிபதி அதிக கவனம் செலுத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.