Breaking News

மாவீரர் நாள் நிகழ்வுகள் -2014 உரைகள் மற்றும் அறிக்கைகள்


அமெரிக்காவில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாள்
தாயக விடுதலைப்போரில் தங்களுடைய இன்னுயிர்களை ஈந்து வித்தாகிப்போன மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வு அமெரிக்காவில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உணர்வுபூர்வமாகக் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது.
தமிழீழ தேசியக் கொடியினை நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமார் ஏற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து மரபுரீதியான மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்றன.




 தமிழீழ மாவீரர்நாள் அறிக்கை - 2014 - தமிழீழ விடுதலைப் புலிகள் 



1
1
1
1
1
1
1


மெல்பேர்ணில் நடைபெற்ற சிறப்புற நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்!(படங்கள்)

தாயக விடுதலைப்போரில் தங்களுடைய இன்னுயிர்களை ஈந்து வித்தாகிப்போன மாவீரர்களை நினைவுகூரும் மாவீர்நாள் நிகழ்வு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
ஸ்பிறிங்வேல் நகர மண்டபத்தில் 27 – 11 – 2014 வியாழக்கிழமை அன்று நடைபெற்ற இந்நினைவெழுச்சிநாள் நிகழ்வில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உணர்வுபூர்வமாகக் கலந்துகொண்டு மாவீரச் செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
சரியாக மாலை 6 மணிக்கு நாடுகடந்த தமிழீழ அரசின் அவுஸ்திரேலிய பிரதிநிதிகளில் ஒருவரும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட் டாளருமான திரு டொமினிக் சந்தியாப்பிள்ளை அவர்கள் பொதுச்சுடரை ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த கரன் மயில்வாகனம் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த செயற்பாட்டாளர் திரு. கிறிஸ்ரி அவர்கள் ஏற்றி வைத்தார்.
அதனையடுத்து ஈகச்சுடரேற்றல் நிகழ்வு இடம்பெற்றது. முதல் மாவீரன் லெப்.சங்கரின் திருவுருவப்படத்திற்கான ஈகச்சுடரை திரு நவீன் அவர்களும், முதற்பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியின் திருவுருவப்படத்திற்கான ஈகச்சுடரை திருமதி நிர்மலா கதிர்காமத்தம்பி அவர்களும் ஏற்றி வைத்தனர். தொடர்ந்து நூறு வரையான மாவீரர் குடும்பங்களை சேர்ந்தோரும் உரித்துடையோரும் தமது மாவீரச் செல்வங்களுக்கு ஈகச்சுடரேற்றி, மலர்வணக்கம் செய்தனர். அதன்பின்னர் இடம்பெற்ற அகவணக்கத்தைத் தொடர்ந்து துயிலுமில்லப்பாடல் ஒலித்தது. மண்டபத்தில் நிறைந்திருந்த அனைவரினதும் கைகளில் தீபங்கள் எரிந்துகொண்டிருக்க அப்பாடல் முழுவதும் உணர்வுமயமாக மக்கள் ஒன்றித்திருந்தனர். அதைத் தொடர்ந்து பொதுமக்களின் மலர்வணக்கம் மிகவும் உணர்வுபூர்வமானதாக நடைபெற்றது.
மலர்வணக்கநிகழ்வின்போது தாயக துயிலுமில்லக்காட்சிகளை தாங்கிய காணொலிகளும், மாவீ­ரர் கவிதைகளின் பின்னுாட்டத்தில் அகன்ற திரையில் காண்பிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. தாயக துயிலுமில்ல நிகழ்வுகளை நினைவில் சுமந்து மாவீரர்களுக்கு தமது மலர்வணக்கத்தை அனைவரும் செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து மாவீரர்களை நெஞ்சிலிருத்தி தமிழீழ விடுதலைக்காக அனைவரும் அயராது உழைப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து மாவீரர் நினைவான நடனத்தை நிருத்தக் சேத்திரா நடனப்பள்ளி மாணவர்கள் வழங்கினர். அதையடுத்து மாவீரர் நினைவுரை ஆங்கிலத்தில் இடம்பெற்றது. இந்நினைவுரையை திரு.சிந்துாரன் திலகராஜா அவர்கள் நிகழ்த்தினார். தொடர்ந்து நடனாலய நடனப்பள்ளி மாணவர்களின் மாவீரர் நினைவு நடனம் இடம்பெற்றது.
நினைவு நடனத்தைத் தொடர்ந்து மாவீரர் நினைவுரையை திரு. ஈசன் அவர்கள் நிகழ்த்தினார். மாவீரர்களின் தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் மையப்படுத்தி அமைந்த அவ்வுரையில் குறிப்பிட்ட சில மாவீரர்களின் தியாகச் சம்பவங்களைத் தொட்டுக்காட்டிய ஈசன், போராட்ட வடிவங்கள் மாறினாலும் ஒன்று பட்ட சக்தியாகத் தொடர்ந்தும் பயணிப்பதே மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையுமென்ற கருத்தை முன்வைத்தார்.
இறுதி நிகழ்வாக நாட்டிய நாடகம் ஒன்று இடம்பெற்றது. மாவீரரின் உன்னதமான தியாகத்தை எடுத்தியம்பும் வகையில் அமையப்பெற்ற இந்நாட்டிய நாடகம் அழகான பின்னணி இசையுடனும் ஒளியமைப்புடனும் அரங்கில் நிகழ்த்தப்பட்டது. மாவீரர்களின் அர்ப்பணிப்பை அனைவர் முன்கொண்டுவந்த அக்கலைப்படைப்பில் எதிர்காலச்சந்ததிக்கும் எம்மவர் தியாகமகத்துவத்தை எடுத்துச்செல்வதாய் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இரவு 9.00 மணியளவில் தேசியக் கொடிகள் இறக்கப்பட்டதுடன் ”தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்” என உறுதியெடுத்துக்கொண்டு நிகழ்வு எழுச்சியுடன் நிறைவுபெற்றது. கடந்த ஆண்டுகளைப் போலவே இவ்வாண்டும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் வெளியிடப்பட்ட காந்தள் என்ற மாவீரர்நினைவுகளை தாங்கிய இதழ் இந்நிகழ்வில் விநியோகிக்கப்பட்டது. தேசியத்தலைவர், மாவீரர்கள், தேசியக்கொடி, தேசியகீதம், தமிழீழம் ஆகியவை குறித்த விளக்கக் கட்டுரைகளுடன் பொதுமக்கள் மற்றும் தமிழ் அமைப்புக்கள், வர்த்தக நிறுவனங்கள் வழங்கிய மாவீரர் வணக்க கவிதைகளையும் தாங்கி காந்தள் இதழ் வெளியாகியிருந்தது.
நன்றி.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு (விக்ரோரியா)
Mel-Maaveerar-Naal-2014 (08-2)
Mel-Maaveerar-Naal-2014 (01)
Mel-Maaveerar-Naal-2014 (02)
Mel-Maaveerar-Naal-2014 (03)
Mel-Maaveerar-Naal-2014 (04)
Mel-Maaveerar-Naal-2014 (06)
Mel-Maaveerar-Naal-2014 (08-1)
Mel-Maaveerar-Naal-2014 (08-3)
Mel-Maaveerar-Naal-2014 (08-4) (1)
Mel-Maaveerar-Naal-2014 (09-1)
Mel-Maaveerar-Naal-2014 (09-2)
Mel-Maaveerar-Naal-2014 (09-4)
Mel-Maaveerar-Naal-2014 (09-5) (1)
Mel-Maaveerar-Naal-2014 (09-6) (1)
Mel-Maaveerar-Naal-2014 (09-7) (1)
unnamed
unnamed (1)

யேர்மனியில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வு.

தமிழீழ தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை மனதில் நிறுத்தி யேர்மனியில் DORTMUND நகரில் பிரம்மாண்ட மண்டபத்தில் மாவீரர் நாள் நிகழ்வு மிகவும் எழுச்சிகரமாக நினைவுகூரப்பட்டது.
நண்பகல் 12.45 மணியளவில்  பொதுச்சடர் ஏற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து  தேசியக் கொடி ஏற்றப்பட்டு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நாள் அறிக்கை ஒலிபரப்பப்பட்டது.
உரையின் முடிவில் மணியோசை மண்டபம் நிறைக்க  மாவீரர்களுக்கான ஈகைச்சுடர் மாவீரர் ஒருவரின் சகோதரியால் ஏற்றிவைக்கப்பட்டது.
அகவணக்கத்தினைத் தொடர்ந்து சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்த மாதிரி மாவீரர் துயிலும் இல்லமும்  தூபிகளும் சுடர்களால் ஒளியூட்டப்பட்டு உத்தமர்களின் உறைவிடம் ஒளிப்பிரகாசமானது.
சுடர் ஏந்தி மாவீரர் குடும்பத்தவர் வரிசையாக நிற்க தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தணப் பேழைகளே என்கின்ற கல்லறைப்பாடல் மக்களின் மனங்களையெல்லாம் ஆக்கிரமித்துக் கொண்டது. 
மாவீரர்களது குடும்ப உறவினரால் சுடர்வணக்கமும் தேசிய மலராம் கார்த்திகைப்பூக் கொண்டு மாவீரர்களுக்கான மலர்வணக்கமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தமிழீழம் இசைக்குழுவினரால்  மாவீரர் கானங்கள் இசைக்கப்பட மலர்வணக்கமும் சுடர் வணக்கமும் நிகழ்ந்து கொண்டிருந்தன. எமக்காய் வாழ்ந்து எமக்காய் மடிந்த ஈகைச் செல்வங்களே உங்களைப் போற்றுவதால் நாம் புனிதமடைகின்றோம்! உங்கள் கல்லறை மீதுமே சத்தியம் செய்து எம் பணி தொடர்வோம் என்று வரிசையாக மக்கள் துயிலுமில்லம் நோக்கி அணிவகுத்து மலர் தூவி சுடர் ஏற்றி தமது வணக்கத்தைச் செலுத்தினர்.
எங்கிருந்து என்பது புரியாது. எவர் பிள்ளைகள் என்று பாராது. என் பிள்ளைதான் நீயோ என்று எல்லோரும் தமது பிள்ளைகளாய் எண்ணி மாவீர்களை பூசித்த காட்சியானது தமிழினத்தையும் ஈழவிடுதலையையும் எந்தத் துரோகமும் எந்த சதித் தந்திரங்களுக்கும் வென்றுவிட முடியாது அவை தூர விரட்டியடிக்கப்படும் என்பதை உணர்த்தி நின்றது.
மண்டப மேடையில் இவ் ஆண்டின் சிறப்பு வெளியீடுகளாக எழுச்சிகானங்களை உள்ளடக்கிய 2 இறுவெட்டுக்கள் மாவீரர் நிகழ்ச்சியில் வெளியிட்டு வைக்கப்பட்டன.
தொடர்ந்த சிறப்பு விருந்தினரின் சிறப்புரை இடம்பெற்றது. மக்களின் உறுதியான போராட்டம் தொடர வேண்டிய அவசியத்தையும் இனவிடுதலை என்பது ஈழவிடுதலையைத் தவிர வேறெந்த வழியிலும் சாத்தியமாகப் போவதில்லை என்பதையம் வலியுறுத்தி அவரது பேச்சு அமைந்தது.
தொடர்ந்து மாவீரர்கள் நினைவாக எழுச்சி நடனங்கள், எமது மக்களின் அவலங்களை வெளிக்காட்டும் நாட்டிய நாடகம், கவிதைகள் என நிகழ்வுகள் அரங்கேறியது.
தமிழீழ விடுதலையை வென்றெடுக்க தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது வழிநடாத்துதலில் அவர்களால் உருவாக்கப்பட்ட அனைத்துக் கட்டுமானங்களையும் பலப்படுத்தி தொடர்ந்து போராடுவோம் என்றும் இப்பணிகளை உறுதியுடனும் ஒற்றமையுடனும் முன்நின்று நாம் முன்னெடுத்துச் செல்வோம்  என்றும் உறுதி கூறப்பட்டது.
இதேவேளை யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின்  மாவீரர் குடும்ப மதிப்பளிப்புக் குழுவின் ஏற்பாட்டில் முற்பகல் 10 மணியளவில் இருந்து மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு அதே மண்டபத்தின் ஒரு பகுதியில் நடைபெற்றது.
எமக்காய் தம்மைத் தந்த மாவீரர்களை ஈன்றெடுத்தவர்கள் மற்றும் சகோதர சகோதரிகள் கிளைச் செயற்பாட்டாளர்களோடு கூடிநின்று மாவீரராகிய பிள்ளைகளையும் அவர்தம் வாழ்வையம் பகிர்ந்து கொண்டதோடு அப் பிள்ளைகளின் செயலை எண்ணிப்  பாராட்டினர்.
அவர்களது இலட்சியத்தில் தமிழினம் விடிவுபெற வேண்டும் என்றும் மனதாரப் பிரார்தித்தனர். இந் நிகழ்வின் இறுதியில் மதிப்பளிப்புக் குழுவினரால் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.



கட்டாரில் எழுச்சியுடன் அனுஸ்டிக்கப்பட்ட மாவீரர் தினம்!
தமிழீழ தாயக விடுதலைக்காய் வித்தாகிய எமது மாவீரர் நாள் நிகழ்வுகள் டோகா கட்டார் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் நடத்தப்பட்டது.
இதில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் கலந்து கொண்டு எம் விடுதலைக்காய் வித்தாகிய மாவீரர்களுக்கு தீபம் ஏற்றி வீரவணக்கம் செலுத்தினார்கள்.
பின்லாந்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் நாள்
பின்லாந்து தமிழர் பேரவையை சேர்ந்த தினேஷ் தலைமையில் மாலை 5 மணியளவில் ஆரம்பமாகியது.
முதலாவது நிகழ்வாக பொதுச் சுடர் ஏற்றப்பட்டது, பொதுச் சுடரினை பின்லாந்து தமிழர் அவையின் செயலாளர் அவர்கள் ஏற்றி வைத்தார்கள், அதனைத் தொடர்ந்து தமிழீழ தேசிய கொடியினை தமிழகத்தில் இருந்து வருகைதந்து இருந்த பேராசிரியர் மு. செ.அறிவு அரசன் அவர்கள் ஏற்றி வைத்தார்கள்.
அதனைத் தொடர்ந்து மாவீரர்நாள் அறிக்கை ஒலிபரப்பப்பட்டது. தொடர்ந்து மாவீரர் நினைவு மணி ஒலி எழுப்பப்பட்டு, ஈகைச் சுடர் ஏற்றப்பட்டது. பின்னர் மாவீர்களுக்கும் போரினால் கொல்லப்பட்ட பொது மக்களுக்கும் அக வணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து சிறப்பு உரையினை பேராசிரியர் மு.செ.அறிவு அரசன் அவர்கள் நிகழ்த்தினார்.
தொடர்ந்து அன்னை பூபதி கலைக்கூட ஆசிரியர்களினதும் மாணவர்களினதும், மாவீரர்களின் ஈகத்தை போற்றும் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.
பெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள்
தேசிய மாவீரர் நாள் பெல்ஜியம் நாட்டில் மிக உணர்வுபூர்வமாக நடைபெற்றது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வை தொடர்ந்து எமது மண்ணுக்காக தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரச் செல்வங்களுக்காக வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.
சிறப்பு பேச்சாளராக யேர்மனியில் இருந்து கலந்துகொண்ட ஆசிரியர் தமிழ் மக்கள் மாவீரச் செல்வங்கள் எம்மிடம் விட்டுச்சென்ற பணிகளை, தேசியக் கடமைகளை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தனது உரையை நிகழ்த்தினார்.
தேசிய மாவீரர் நாளில் கலந்து கொண்ட மக்கள் தமது பிள்ளைகளை வணங்கியதோடு அவர்களின் ஆசைகளை நிறைவேற்ற உறுதி எடுத்துக் கொண்டனர்.

பிரான்ஸ் கடலில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகள்
விடுதலைப் போராட்டத்தின் போது வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கும் அதன்பால் கொல்லப்பட்ட மக்களுக்கும் பிரான்ஸ் உள்ள கடலில் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு நினைவு கூறப்பட்டது.