Breaking News

மன்னார் ஆயரின் பிரதி நிதி வித்தியாவின் பெற்றோரை சந்தித்து கலந்துரையாடல் (படங்கள் இணைப்பு)

கொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வீட்டிற்கு நேற்று வெள்ளிக்கிழமை மன்னார் மறைமாவட்ட ஆயரின் பிரதிநிதியாக சென்ற மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை குறித்த மாணவியின் பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் கலந்துரையாடியதோடு தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளனர்.

மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்கூறிய இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்கள் சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஆயரின் பிரதி நிதியாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தீவக பொறுப்பாளருமான விந்தன் கனகரத்தினம் ஆகியோர் வித்தியாவின் வீட்டிற்கு சென்று கலந்துரையாடினர்.

இதன் போது வித்தியாவின் கொலை தொடர்பில் குற்றவாழிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும்,வித்தியாவிற்கு நடந்தது போல் இனி யாருக்கும் நடக்கக்கூடாது என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

எங்களுக்கு எந்த வித உதவிகளும் வேண்டாம்.ஆனால் குற்றவாழிகளுக்கு அதிகூடிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என தெரிவித்ததோடு தற்போது தாம் வீட்டில் பாதுகாப்பற்ற கூ10ழலிலே வாழ்ந்து வருவதாக வித்தியாவின் சகோதரர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு இவர்களுக்கு அதி கூடிய தண்டனையை வழங்க வேண்டும் என வித்தியாவின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,மறைமாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.