கைது செய்யப்பட்ட த.தே.ம. முன்னணியின் பிரச்சாரக் குழுவினர் விடுதலை (2ம் இணைப்பு) - THAMILKINGDOM கைது செய்யப்பட்ட த.தே.ம. முன்னணியின் பிரச்சாரக் குழுவினர் விடுதலை (2ம் இணைப்பு) - THAMILKINGDOM

  • Latest News

    கைது செய்யப்பட்ட த.தே.ம. முன்னணியின் பிரச்சாரக் குழுவினர் விடுதலை (2ம் இணைப்பு)

    இன்று காலை தென்மராட்சிப் பகுதியில் பிரச்சார நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணின் உயர் மட்ட பிரச்சாரப்பிரிவினர் விடுதலை செய்யப்பட்டனர்.
    அதனைத் தொடர்ந்து பிரச்சாரப் பணிகள் தென்மராட்சி பகுதியில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

    தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சாரக்குழுவினர்  கைது

    இன்று தென்மராட்சிப் பகுதியில் பிரச்சாரப் பணியினை மேற்கொண்டிருந்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சாரக்குழுவினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

    மாற்றத்துக்கான தேவையினை மக்களுக்கு விளக்கம் அளித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆதரவாளர்கள் மூவரையும் தென்மராட்சி காவல் துறையினர் கைது செய்து காவல் நிலையத்தில் தடுத்துவைத்துள்ளனர். ஏற்கனவே தமிழ்த்தேசிய முன்னணியினரின் பரப்புரைகளில் முடக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

    தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால்(அகில இலங்கை தமிழ்காங்கிரஸ்)முன்னெடுக்கப்படும் தேர்தல் பரப்புரைகளை அரசாங்கம் திட்டமிட்டு முடக்கி வருகின்றது என்று அக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் வி.மணிவண்ணன் அண்மையில் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: கைது செய்யப்பட்ட த.தே.ம. முன்னணியின் பிரச்சாரக் குழுவினர் விடுதலை (2ம் இணைப்பு) Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top