Breaking News

சந்தானத்தை கலாய்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி!

ஆர்யா, சந்தானம், தமன்னா நடித்துள்ள படம் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’. இப்படத்தை ராஜேஷ் இயக்கியிருக்கிறார்.

இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் ஆர்யா, சந்தானம், இயக்குனர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

இதில் சந்தானம் பேசும்போது நான் ராஜேஷ் இயக்கத்தில் ‘எஸ்.எம்.எஸ்’ படத்தில் நடித்தேன். ஒரு காமெடி நடிகனை போஸ்டரில் சின்ன போட்டோ மட்டும்தான் போடுவார்கள். ஆனால் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் அவர் ஒரு ஹீரோவுக்கு நிகரான காமெடி கதாபாத்திரத்தை உருவாக்கி என்னை அங்கீகரித்தார்.

நானும் ஆர்யாவும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். நான் சும்மா என்னுடைய ரசிகைகளிடம் சௌத் இந்தியா காமெடி சூப்பர் ஸ்டார் என்று கூறினேன்.அதை கேட்ட ஆர்யா, சேட்டை படத்தில் காமெடி சூப்பர் ஸ்டார் என்று பட்டம் கொடுத்துவிட்டார். அதன்பின்னர் ரஜினியுடன் நான் நடிக்கும் போது, அவர் என்னிடம், ‘என்ன… காமெடி சூப்பர் ஸ்டார் பட்டம் போட்டுட்ட?’ என்று கேட்டார்.

நான் உடனே, ‘சார் நான் காரணம் இல்ல, ஆர்யாதான் காரணம்’ என்று கூறினேன். அப்போது ஆர்யா-சந்தானம் காம்பினேஷன் நல்லா இருக்கு என்று அவர் பாராட்டினார். இந்த படம் நல்லா இருக்கும். எல்லாருக்கும் பிடிக்கும்” என்றார்.