Breaking News

சர்­வ­தேச நிபு­ணத்­துவ பங்­க­ளிப்பு பொறி­மு­றைக்கு வலு­ச்சேர்க்கும் - சட்­டத்­த­ரணி ஜே.சி வெலி­அ­முன

உள்­ளக விசா­ரணைப் பொறி­மு­றையில் சர்­வ­தேச நிபு­ணர்கள் பங்­கேற் றால் அதனை உரிய முறையில் நம்­ப­க­ர­மாக முன்­னெ­டுக்க முடியும். சர்­வ­தேசசட்­ட­வல்­லு­னர்கள் இதற்கு முன்­னரும் இலங்­கையின் விசா­ரணை நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்­ளனர். இது இலங்­கைக்கு புதிய விட­ய­மல்ல. எனினும் இதனை பாரா­ளு­மன்­றத்தின் ஊடாக அர­சாங்கம் மேற்­கொள்ள வேண்டும் என சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஜே.சி வெலி­அ­முன தெரி­வித்தார்.

நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்­பட்­டி­ருக்­காவின் சர்­வ­தேச விசா­ரணை நீதி­மன்­றத்­திற்கு முகங்­கொ­டுத்­தி­ருக்க வேண்டி ஏற்­பட்­டி­ருக்கும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

உண்­மையை கண்­ட­றிய ஆணைக்­குழு, காணாமல் போன­வர்­களை கண்­ட­றியும் அலு­வ­லகம், உள்­ளக பொறி­முறை நீதி­மன்றம் ஆகி­ய­வை­க­ளுக்கு பாரா­ளு­மன்­றத்தின் அனு­மதி தேவைப்­ப­டு­கின்­றது. இது குறித்து அர­சாங்­கமே நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற ஜெனிவா தீர்­மானம் தொடர்பில் தெளி­வு­ப­டுத்தும் கருத்­த­ரங்கில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்

இறுதி யுத்த காலப்­ப­கு­தியின் போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை தொடர்பில் மூன்று யோச­னைகள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ மற்றும் ஐக்­கிய நாடு­களின் செய­லாளர் நாயகம் பான் கீ மூன் ஆகி­யோ­ரினால் வெளி­யி­டப்­பட்ட கூட்டு பிர­க­ட­னத்தின் பின்­னரே சர்­வ­தேச அழுத்தம் இலங்­கையின் மீது அதி­க­ரிக்க தொடங்­கி­யது.

சர்­வ­தே­சத்­திற்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை சரி­வர நிறை­வேற்­றா­மையே இத்­த­கைய அழுத்தம் பிர­யோ­கிக்­கப்­ப­டு­வ­தற்கு பிர­தான கார­ண­மாக திகழ்ந்­தது. 2009 ஆம் ஆண்­டிற்கு பின்னர் தென்­னி­லங்­கையில் பல்­வேறு மனித உரிமை மீறல் இடம்­பெற்­றன. . ஊட­க­வி­ய­லாளர்.களை கடத்­தி­யமை, கொலை செய்­தமை போன்­றன பிர­தான அங்­க­மாக கரு­தப்­ப­டு­கின்­றன

.நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டி­ருக்­கா­விடில் இலங்­கையில் நிச்­சி­ய­மாக சர்­வ­தேச நீதி­மன்றம் உரு­வாக்­கப்­பட்­டி­ருக்கும். கற்­றுக்­கொண்ட பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழு­விற்கு சிரேஷ் சட்­ட­வல்­லு­ணர்கள் நிய­மிக்­கப்­பட்ட போதிலும் இதன் அறிக்­கையை அர­சாங்கம் மூடி மறைத்­தது. மேலும் உட­லா­கம ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

குறித்த ஆணைக்­கு­ழுக்­க­ளினால் எதுவும் நடக்­க­வில்லை. இதனை ஆராய இலங்கை வர­வி­ருந்த சர்­வ­தேச பிர­தி­நி­தி­க­ளையும் தடுத்து நிறுத்­தி­யது. இத­னால்தான் பாரிய விப­ரீ­தங்­க­ளுக்கு எமக்கு முகங்­கொ­டுக்க நேர்ந்­தது. காணாமல் போனோர் தொடர்பில் எந்த விசா­ரணை அறிக்­கையும் இது­வ­ரைக்­கா­லமும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

ஆகவே உண்­மையை கண்­ட­றி­வ­தற்கு தற்­போது அர­சாங்கம் முடி­வெ­டுத்­துள்­ளது. இதனை ஜனா­தி­பதி மற்றும் பிர­த­மரும் தெரி­விக்கும் கருத்­துக்­களின் ஊடாக அறிய முடிந்­துள்­ளது. இதற்­க­மைய அர­சாங்கம் அடுத்த கட்­ட­மாக நான்கு முக்­கிய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்கும்.

உண்­மையை கண்­ட­றி­வ­தற்கு ஆணைக்­கு­ழுவை அமைக்கும். அதே­போன்று காணாமல் போனோ­ருக்­கான அலு­வ­லகம் உள்­ளக விசா­ர­ணையை முன்­னெ­டுக்க நீதி­மன்றம் ஆகி­ய­வற்றை அமைக்­க­வுள்­ளது. வடக்கு கிழக்கில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நட்­ட­ஈடு வழங்­கு­வ­தற்கும் நட­வ­டிக்கை எடுக்கும்.

இதன்­போது சர்­வ­தேச சட்ட வல்­லு­நர்கள் இடம்­பெ­று­வது குறித்து பாரிய விமர்­ச­னங்கள் எழுந்­துள்­ளன. இலங்­கையில் சர்­வ­தேச பிர­தி­நி­தி­க­ளு­ட­னான பங்­க­ளிப்பில் அமைந்த விசா­ர­ணைகள் என்­பது புதி­தல்ல. எஸ். டபிள்யு. ஆர். டி. பண்­டா­ர­நா­யக்க கொலை தொடர்பில் விசா­ரிக்­கப்­பட்ட செயற்­பாட்டில் வெளி­நாட்டு பிர­தி­நி­திகள் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

அதே­போன்று உட­லா­கம ஆணைக்­கு­ழு­விலும் வெளி­நாட்டு பிர­தி­நி­திகள் உள்­ள­டங்­கி­யி­ருந்­தனர். ஆகவே இதனை அடிப்­ப­டை­வாத குழுக்கள் நாட்டு மக்­க­ளுக்கு சர்­வ­தேச தலை­யீடு என்ற பெயரில் பாரிய உண்­மைக்கு புறம்­பான செய்­தி­களை கூறி­வ­ரு­கின்­றனர்.

ஒரு நாட்டில் பயங்­க­ர­வாதம் மனித உரிமை மீறல்கள் அதி­க­ளவில் காணப்­ப­டு­மாயின் அதனை எக்­கா­ரணம் கொண்டும் உள்­நாட்டு விவ­கா­ர­மாக கொள்ள முடி­யாது. அது சர்­வ­தேச பிரச்­சி­னை­யாக மாறும். ஆகவே சர்­வ­தேச பிர­தி­நி­தி­க­ளுடன் விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­பது சிறப்­பா­ன­தாக அமையும். இதன் ஊடாக உரிய தீர்வை பெற­மு­டியும் என்­ப­துடன் உண்­மையை கண்­ட­றிய முடியும்.

அதே­போன்று கலப்பு நீதி­மன்றம் அமைப்­ப­தும்­சி­றப்­பா­ன­தாக இருந்­தாலும் இதனை அர­சாங்கம் ஏற்க மறுத்­துள்­ளதால் உள்ள க விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­படும். புலம் பெயர் தமி­ழர்கள் தொடர்பில் பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­களை எழுப்­பி­வ­ரு­கின்­றனர். பிரச்சினையாக காணப்படும் புலம் பெயர் தமிழர் விவகாரத்தை எமக்கு உரிய தீர்வாக மாற்றுவதே சவாலாக உள்ளது. அனைத்து நாடுகளிலும் புலம் பெயர் தமிழர்கள் காணப்படுகின்றனர்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் அடிப்படைவாதிகளல்ல. அவர்களை இணைத்துக்கொண்டு செல்வதன் ஊடாகவே இந்த பயணத்தை வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியும்.

சர்வதேசத்தில் எழுந்துள்ள பிரச்சினை வடக்கு கிழக்குக்கு மட்டுப்படுத்தப்பட்டதல்ல. தென்னிலங்கையிலும் பாரியளவிலான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளன. அதன் விளைவாகத்தான் சர்வதேச அழுத்தம் ஏற்பட்டுள்ளது என்றார்.