Breaking News

கைதிகளின் எழுத்து மூல கோரிக்கை ஜனாதிபதிக்கு சிறைச்சாலை ஆணையாளர் தெரிவிப்பு

தமிழ் அர­சியல் கைதி­கள் தமது விடு­தலை தொடர்­பாக கைய­ளித்த எழுத்து மூல­மான கோரிக்கை ஆவணம் சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சின் செய­லாளர் ஊடாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அனுப்பிவைக்­கப்­பட்­டுள்­ள­தாக சிறைச்­சா­லை ஆணை­யாளர் ரோஹண புஷ்­ப­கு­மார தெரி­வித்தார்.

நேற்­றைய தினம் தமிழ் அர­சியல் கைதிகள் தமது விடு­த­லையை வலி­யு­றுத்தி உண்ணா­வி­ர­தத்தை ஆரம்­பித்­ததைத் தொட ர்ந்து சிறைச்­சா­லைகள்

ஆணை­யாளர் ரோஹண புஷ்­ப­கு­மார முற்­பகல் 11.30மணி­ய­ளவில் மெகசின் சிறைச்­சா­லைக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்தார்.இதன்­போது தமது விடு­தலை தொடர்­பாக வலி­யு­றுத்தி இவ்­வுண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தை ஆரம்­பித்­துள்­ள­தாக ஆணை­யா­ள­ரிடம் கைதிகள் தெரி­வித்­தனர்.

அத்­துடன் இவ்­வி­டயம் தொடர்­பாக உரிய கவ­ன­மெ­டுக்­கு­மாறும் கோரினர். இந்­நி­லையில் அவர்­க­ளது கோரிக்­கை­களை எழுத்­து­மூ­ல­மாக அளிக்­கு­மாறு கேட்­டுக்­கொண்ட ஆணை­யாளர் அதனை பெற்று சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்­சாலை மறு­சீ­ர­மைப்பு அமைச்சின் செய­லாளர் ஊடாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அனுப்புவதற்கான பணிகளை மேற்கொண்டிருந்தார்.

இது தொடர்­பாக சிறைச்­சா­லைகள் ஆணை­யாளர் கருத்து வெளியி­டு­கையில்,

தமிழ் அர­சியல் கைதிகள் சிறைச்­சாலை நிரு­வா­கத்­திற்கு எதி­ரா­கவோ அல்­லது ஏனைய கைதி­க­ளுக்கு எதி­ரா­கவோ சிறைச்­சாலை செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ரா­கவோ தமது போராட்­டத்தை முன்­னெ­டுக்­க­வில்லை. அவர்கள் தமது விடு­த­லையை வலி­யு­றுத்­தியே அமை­தி­யான முறையில் போராட்­டத்தை முன்­னெ­டுக்­கின்­றனர்.

இவர்­களின் கோரிக்­கை­களை எழுத்­து­மூ­ல­மாக என்­னிடம் கைய­ளிக்­கு­மாறு கோரி­யி­ருந்தேன். அத­ன­டிப்­ப­டையில் அவர்­க­ளது விடு­தலை தொடர்­பாக என்­னிடம் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள எழுத்­து­மூ­ல­மான கோரிக்கை ஆவணத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கும் முகமாக சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளேன் என்றார்.