Breaking News

ஐ.எஸ். எதிர்ப்பாளர்களுக்கு அமெரிக்கா ஆயுத உதவி

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபடுகின்ற போராளிகளுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கியுள்ளது.

வான் மார்க்கமாக சுமார் 45 தொன் எடை கொண்ட ஆயுதங்களை விநியோகித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சிரியாவின் ஹசாகெஹ் மாகாணத்தில் இந்த ஆயுதங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இதில் சிறிய வகையான ஆயுதங்கள், வெடி பொருட்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் காணப்படுகின்றன.ஏற்கனவே சிரியாவில் போராளிகளுக்கு அமெரிக்கா வழங்கிவந்த பயிற்சிகளை இடைநிறுத்திய மறுதினம் இந்த பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

பயிற்சி பெற்ற போராளிகள் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்து கொள்கின்றமையே இதற்கான காரணம்.இந்த பயிற்சிகளுக்காக அமெரிக்காவினால் ஒதுக்கப்பட்ட 500 மில்லியன் டொலர் நிதி, ஆயுதங்களை விநியோகிக்க பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.