தமிழக மீனவர்கள் மோடிக்கு கடிதம்
தங்களின் பிரச்சினைகளை விரைவாக தீர்க்குமாறு வலியுறத்தி, தமிழகத்தின் தேசிய மீனவர் சங்கம் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
இந்திய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.
இலங்கையுடன் ராஜதந்திர பேச்சுவார்த்தைகளை நடத்தி, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்குமாறு அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.அத்துடன் இந்த பிரச்சினையை மனிதாபிமான ரீதியாக பார்க்குமாறும் கோர்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.








