Breaking News

கூட்டமைப்பு அரசியல் ரீதியாக எம்முடன் செயற்பட வேண்டும்! என்கிறார் மனோ

வரு­டக்­க­ணக்கில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதிகள் தொடர் பில் நான் இன்னும் சில தினங்­களில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் பேச­வுள்ளேன். 

இவர்­க­ளுக்கு பொது­மன்­னிப்பு வழங்க ஜனா­தி­ப­தியால் மட்­டுமே முடியும். அதேபோல் விசா­ரணை கைதி­க­ளுக்கு பிணை வழங்க,வழக்கு தொடுனர் திணைக்­க­ளத்­துக்கு பணிப்­புரை வழங்­கவும் அவ­ருக்கு முடியும். தேசிய கலந்­து­ரை­யா­டல்கள் அமைச்­சரும், ஜன­நா­யக மக்கள் முன்­னணி தலை­வ­ரு­மான மனோ கணேசன் எம்பி தெரி­வித்­துள்ளார்.

இப்­படி அர­சியல் குற்றம் புரிந்த பலர் வடக்­கிலும், தெற்­கிலும் இரு­கின்­றார்கள். பாரிய குற்­றங்கள் புரிந்­தார்கள் என்ற பலத்த சந்­தே­கங்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட பலரும் நாடு முழுக்க இரு­கின்­றார்கள். இவர்­களில் பலர் தெற்­கிலும், வடக்­கிலும் வாழும் மக்­களின் சார்­பாக பாரா­ளு­மன்­றத்­திலும் இருக்­கின்­றாகள். எனவே இன்­றைய தமிழ் அர­சியல் கைதி­களை பிணை­யிலோ, மன்­னிப்­பிலோ விடு­விக்க அர­சி­யலை தவிர, வேறு தடை­யேதும் கிடை­யாது என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

அர­சியல் கைதிகள் தொடர்­பான சமூக அமைப்­புகள், அமைச்சர் மனோ கணே­சனை நேற்று அவ­ரது இல்­லத்தில் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தின. . இந்த உரை­யா­டலில் கருத்து வெளி­யிட்ட அமைச்சர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது

அர­சியல் கைதிகள் விவ­காரம் எமது அடிப்­படை பிரச்­சி­னை­களில் ஒன்­றாகும். இது தீர்க்­கப்­ப­டா­விட்டால் இந்த நாட்டில் நல்­லெண்­ணத்தை ஏற்­ப­டுத்த முடி­யாது. எனக்கு இது ஒரு புதிய விடயம் இல்லை. இது­பற்றி எனக்கு ஆழ­மாக தெரியும். இது­பற்றி நாம் ஏற்­க­னவே அர­சாங்க தலை­மைக்குள் உரை­யா­டி­யுள்ளோம். இன்று ஒரு தீர்­வுக்­கான சூழல் உரு­வா­கி­யுள்­ளது. அதை பயன்­ப­டுத்தி இந்த பிரச்­சி­னையை நான் ஜனா­தி­ப­தியின் கவ­னத்­துக்கு இன்னும் சில தினங்­களில் மீண்டும் கொண்டு வர­வுள்ளேன்.

தனிப்­பட்ட கார­ணங்­க­ளுக்­காக கொலை செய்தோர், கொள்ளை அடித்தோர், பாலியல் வல்­லு­றவில் ஈடு­பட்டோர் பற்றி நாம் இங்கே பேச­வில்லை. மேலும் குறிப்­பிட்ட இந்த குற்­றங்­களை புரி­யா­ம­லேயே, வெறும் சந்­தே­கத்தின் அடிப்ப்­ப­டை­யிலும் பலர் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளார்கள். எனவே இங்கே எல்­லாமே அர­சி­யல்தான். எனவே யார் என்ன சொன்­னாலும், இவர்கள் அர­சியல் கைதி­கள்தான்.

இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு தனது முயற்­சி­களை செய்­யும்­போது அது தொடர்பில் ஒரு அமைச்­ச­ரவை அமைச்­ச­ரான எனக்கும் அறி­வித்து, கலந்­தா­லோ­சித்தால் அது இந்த பிரச்­சி­னைக்கு தீர்வை எட்ட மிகவும் உதவும் என்­பது எனது நிலைப்­பாடு. அர­சாங்­கத்­துக்கு உள்ளே இருக்­கின்ற தமிழ் முற்­போக்கு கூட்­டணி உள்ளே இருந்­த­ப­டியும், தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு வெளியே இருந்­த­ப­டியும் முயற்­சி­களை செய்­யலாம். புதிய பாரா­ளு­மன்றம் கூடிய முதல் நாளே தமி­ழ­ரசு கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராசா எம்.பி. தமிழ் எம்­பிக்­களை ஒருங்­கி­ணைத்து ஒரு பாரா­ளு­மன்ற குழுவை அமைப்போம் என்று யோசனை சொன்னார்.  அதை நான் உட­னேயே ஆமோ­தித்தேன். ஆனால், அதன்­பி­றகு அது­பற்­றிய முயற்­சிகள் எதுவும் நடக்­க­வில்லை. 

இத்­த­கைய ஒரு தமிழ் எம்­பீக்கள் குழு தொடர்பில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­புதான் பிரே­ரித்து எங்­க­ளுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். இந்த குழு அமை­யு­மானால் அதில் நாம் அர­சியல் கைதிகள் உட்­பட நாடு முழுக்க வாழும் தமிழ் மக்­களின் பொது­வான பிரச்­சி­னை­களை பேசலாம். இந்த குழு, முஸ்லிம் எம்.பி. க்களு­டனும் பேசலாம். ஜே.வீ.பி. யுடனும் பேசலாம். ஏனைய முற்­போக்கு எம்.பி.க்களு­டனும், கட்சி பேதங்­க­ளுக்கு அப்­பாற்­பட்டு பேசலாம்.

ஆனால், தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்­துடன் தங்­க­ளுக்கு இருக்­கின்­ற­தாக கரு­தப்­படும் பிரத்­தி­யேக தொடர்பு வழியால் பிரச்­சி­னை­களை தாங்­களே பேசி தீர்க்­கலாம் என்று முடிவு செய்து இருக்­கு­மானால், அது அவர்­க­ளது உரிமை. பொது பிரச்­ச­னை­களை தீர்க்க தேசிய நல்­லெண்ண விவ­கார பொறுப்பை கொண்­டுள்ள தேசிய கலந்­து­ரை­யாடல் அமைச்­ச­ரான எனது ஒத்­து­ழைப்பு தேவை­யில்லை என்ற கூட்­ட­மைப்பு முடிவு செய்­யலாம். அந்த உரி­மையில் நான் தலை­யி­டு­வது நாக­ரீ­க­மில்லை.

எது எப்­படி இருப்­பினும் வரு­டக்­க­ணக்கில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதிகள் தொடர்பில் நான் இன்னும் சில தினங்­களில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் பேச­வுள்ளேன். இவர்­க­ளுக்கு பொது­மன்­னிப்பு வழங்க ஜனா­தி­ப­தியால் மட்­டுமே முடியும். அதேபோல் விசா­ரணை கைதி­க­ளுக்கு பிணை வழங்க, வழக்கு தொடுனர் திணைக்களத்துக்கு பணிப்புரை வழங்கவும் அவருக்கு முடியும். 

இவர்கள் அரசியல் கைதிகள் என்றால், இந்த விவகாரம் தொடர்பான விடுவிப்பு அல்லது பிணை என்ற முடிவுகளும், அரசியல் முடிவுகளாகத்தானே இருக்க முடியும்? ஆகவேதான் நாம் அரசியல்ரீதியாக இணைந்து செயற்பட வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட்ட அனைத்து தரப்பினரும் புரிந்துக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறேன்.