Breaking News

உள்ளக விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெறுவது அவசியம்! வலியுறுத்துகிறது பிரிட்டன்

இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள நல்­லி­ணக்­கத்­திற்கும் பொறுப்­புக்­கூ­ற­லுக்­கு­மான உள்­ளக விசா­ரணை பொறி­முறை செய ற்­பாட்டில் வெளி­நாட்டு நீதி­ப­திகள் இடம் பெற வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் என்று பிரிட்டன் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கி­றது.

தமிழர் விவ­காரம் தொடர்­பான பிரிட்டன் பாரா­ளு­மன்ற குழு­வுக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­த­மொன்­றி­லேயே அந்­நாட்டின் வெளி­வி­வ­கார மற்றும் பொது­ந­ல­வாய நாடுகள் அலு­வல்கள் அமைச்சர் ஹியூகோ ஸ்வையர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

அண்­மையில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையும் பொது­ந­ல­வாய மற்றும் வெளி­நாட்டு நீதி­ப­திகள், சட்­டத்­த­ர­ணிகள், ஆகியோர் இலங்­கையில் பொறுப்­புக்­கூறல் செயற்­பாட்டில் இடம் பெற­வேண்­டி­யது அவ­சியம் என்­பதை வலி­யு­றுத்­தி­யி­ருந்­த­தா­கவும், பிரிட்டன் வெளி­வி­வ­கார மற்றும் பொது­ந­ல­வாய நாடுகள் அலு­வல்கள் அமைச்சர் ஹியூகோ ஸ்வையர் குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.

தமி­ழர்கள் விவ­காரம் தொடர்­பான பாரா­ளு­மன்ற குழு­வுக்கு ஹியூகோ ஸ்வையர் அனுப்­பி­வைத்­துள்ள அந்தக் கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:-

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்­புக்­கூ­ற­வேண்­டி­ய­வர்­க­ளுக்கு தண்­டனை அளிக்கும் வகை­யிலும் நீதி­மன்ற செயற்­பா­டு­களை இலங்­கையின் உள்­நாட்டு சட்­டத்­திட்­டங்­க­ளுக்கு அமைய முன்­னெ­டுப்­ப­தற்­கான சந்­தர்ப்­பத்­தையும் மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை தொடர்­பான பிரே­ரணை பெற்றுக் கொடுக்­கின்­றது.

சர்­வ­தேச மனித உரிமை சட்­டங்கள் மற்றும் சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­டங்கள் என்­பன தொடர்­பாக இலங்கை முன்­னெ­டுக்­க­வுள்ள செயற்­பா­டுகள் தொடர்பில் சர்­வ­தேசம் ஐக்­கிய நாடுகள் மனி­த­உ­ரிமை அலு­வ­லகம் ஊடாக தொடர்ச்­சி­யான மதிப்­பீட்டை செய்­ய­வேண்டும் என்றும் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ரணை வலி­யு­றுத்தி இருக்­கின்­றது.

இவ்­வ­ருடம் ஜன­வரி மாதம் இலங்­கைக்கு நான் விஜயம் மேற்­கொண்ட பின்னர் பிரிட்­டனில் சர்­வ­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு இலங்­கையின் நிலைமை தொடர்பில் விளக்­க­ம­ளித்­தி­ருந்தேன். ஜன­வரி மாதத்­தி­லி­ருந்து இலங்­கையில் ஆரோக்­கி­ய­மான செயற்­பா­டுகள் தொடர்­கின்­றன.

இலங்­கையின் முன்­னைய அர­சாங்கம் இதற்கு முன்னர் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணை­களை முற்­றாக எதிர்த்­தி­ருந்­தது. ஆனால் இலங்­கையின் புதிய அர­சாங்கம் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வை­யுடன் ஆக்­க­பூர்­வ­மான தொடர்­பு­களை பேணி வரு­கி­றது.

இந்த முழு­மை­யான இலங்­கையின் புதிய அனு­கு­மு­றை­யையும் பல்­வேறு முக்­கி­யத்­துவம் வாய்ந்த பரிந்­து­ரை­களை முன்­வைத்­துள்ள பிரே­ர­ணை­யையும் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­ல­கத்தின் விசா­ரணை அறிக்­கை­யையும் நான் வர­வேற்­கின்றேன்.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் இம்­முறை நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ரணை மற்றும் இதற்கு முன்னர் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணைகள் என்­ப­வற்றில் பிரிட்டன் முழு­மை­யான வகி­பாகம் ஒன்று வகித்­தமை தொடர்பில் பெருமை அடை­கி­றது.

அது­மட்­டு­மன்றி இலங்­கை­யி­னதும் பிரிட்­ட­னி­னதும் சிவில் மற்றும் அர­சியல் குழுக்கள் இந்தப் பிரே­ரணை தொடர்பில் சிறந்த கருத்­துக்­களை முன்­வைத்­துள்­ளன. தற்­போது செயற்­பாட்டை மேற்­கொள்­ள­வேண்­டிய பணி இலங்­கையின் நீதி­மன்ற கட்­ட­மைப்­பிற்கே காணப்­ப­டு­கின்­றது.

ஆனால் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­ல­கத்தின் இலங்கை தொடர்­பான விசா­ரணை அறிக்­கையின் பரிந்­து­ரை­களை முன்­னெ­டுத்து செல்ல வேண்டும் என்­பதை பிரிட்டன் விரும்­பு­கி­றது. அதா­வது இலங்­கை­யா­னது நம்­ப­க­ர­மாக இந்தப் பரிந்­து­ரை­களை அமுல்­ப­டுத்த வேண்­டு­மென பிரிட்டன் விரும்­பு­கி­றது. இந்த செயற்­பா­டு­க­ளுக்கு காலம் எடுக்­கலாம். ஆனால் சர்­வ­தேச சமூ­கத்தின் உதவி தேவை­யான அனைத்து சர்ந்­தப்­பங்­க­ளிலும் வழங்­கப்­படும்.

பிரிட்­ட­னா­னது இலங்­கையின் இந்தப் புதிய நிலை­மை­களில் நிச்­ச­ய­மாக தனது பங்­க­ளிப்பை முழு­மை­யாக மேற்­கொள்ளும், இந்த இடத்தில் சர்­வ­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் தொடர்ச்­சி­யான இலங்கை மற்றும் இலங்கை மீதான அக்­கறை தொடர்பில் நன்­றியைத் தெரிவிக்கின்றேன். அத்துடன் எதிர்காலத்தில் இந்தப் பாராளுமன்றக் குழுவுடன் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கின்றோம்.

இலங்கையில் நிரந்தர சமாதானத்தை அனைத்து மக்களுக்காக கட்டியெழுப்புவதிலும் ஒருவருக்கொருவர் மதிப்பளிக்கும் வகையிலான ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவதிலும் அனைத்து விடயங்களையும் முன்னோக்கி ஆராய்ந்து செல்வதிலும் இலங்கையுடன் இணைந்து செயற்பட பிரிட்டன் தயாராக இருக்கிறது.