ஜனாதிபதியை இன்று சந்திக்கிறார் சம்பந்தன்
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் இன்று செவ்வாய்க்கிழமை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீண்டகாலமாக வழக்கு தொடராமல் சிறைவைக்கப்பட்டிருக்கும் தங்களை பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்குமாறு கோரி நாடளாவிய ரீதியிலுள்ள 14 சிறைகளில் 217 தமிழ் அரசியல் கைதிகள் நேற்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலயைிலே தடுப்பிலுள்ள அரசியல் கைதிகளின் விடுதலைக் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதியை சந்தித்து பேசவிருப்பதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் கைதிகள் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சிவில் மற்றும் மனித உரிமைகள் என்பன ஆதரவளித்துள்ள நிலையில் அவர்களுக்காக போராட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடதத்க்கது.








