Breaking News

இலங்கை விசாரணையில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு அவசியம் : பிரித்தானியா

யுத்தக் குற்றம் குறித்து இலங்கையில் மேற்கொள்ளவுள்ள விசாரணை பொறிமுறையில், சர்வதேச நீதவான்களின் பங்களிப்பு அவசியமென பிரித்தானியா தெரிவித்துள்ளது.

அத்துடன், இலங்கையின் நீதித்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தி பொறுப்புக்கூறும் செயற்பாட்டினை உறுதிசெய்யவேண்டுமென பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹூகோஸ் ஸ்வயர் தெரிவித்துள்ளார்.

யுத்தக் குற்றம் குறித்த விசாரணையில் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்துடன் இணைந்து செயற்பட இணக்கம் தெரிவித்துள்ளமையானது, வரவேற்கத்தக்கதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தக் குற்றம் தொடர்பில் நம்பகத்தன்மை வாய்ந்த ஒரு விசாரணை பொறிமுறையை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் பட்சத்தில், பிரித்தானியா அதற்கு பூரண ஆதரவை வழங்குமென ஏற்கனவே பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.