Breaking News

கிளிநொச்சி மாவட்டத்தில் 7,076 பெண் தலைமைத்துவ குடும்பங்கள்

கிளி­நொச்சி மாவட்­டத்தில் தற்­போது ஏழா­யி­ரத்து 76 பெண் தலை­மைத்­துவக் குடும்­பங்கள் வாழ்ந்து வரு­வ­தாக மாவட்ட செய­ல­கப்­புள்ளி விப­ரத்தில் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

கடந்த யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தம், விபத்­துக்கள் உள்­ளிட்ட பல கார­ணங்­க­ளி­னாலும் தொழில் வாய்ப்பு தேடி வெளி­நா­டு­க­ளுக்கு செல்­லுதல் குடும்பப் பிணக்­குகள் கார­ண­மாக குடும்ப பிரி­வுகள் கார­ண­மா­கவும் என பல்­வேறு கார­ணங்­க­ளினால் கிளி­நொச்சி மாவட்­டத்தின் கரைச்சி, கண்­டா­வளை, பூந­கரி பச்­சி­லைப்­பள்ளி ஆகிய நான்கு பிர­தேச செயலர் பிரி­வு­க­ளிலும் ஏழா­யி­ரத்து 76 பெண் தலை­மைத்­துவக் குடும்­பங்கள் தற்­போது வாழ்ந்து வரு­கின்­றன.

குறிப்­பாக நான்கு பிர­தேச செயலர் பிரி­வு­க­ளிலும் இரு­பது வய­திற்கு உட்­பட்ட 34 குடும்­பங்­களும் முப்­பது வய­திற்கு உட்­பட்ட 526 குடும்­பங்­களும் நாற்­பது வய­திற்கு உட்­பட்ட ஆயி­ரத்து 124 குடும்­பங்­களும் ஐம்­பது வய­திற்கு உட்­பட்ட ஆயி­ரத்து 335 குடும்­பங்­களும் அறு­பது வய­திற்கு உட்­பட்ட ஆயி­ரத்து 507 குடும்­பங்­களும் அறு­பது வய­திற்கு மேற்­பட்ட இரண்­டா­யி­ரத்து 550 குடும்­பங்­களும் என பெண் தலை­மைத்­துவ குடும்­பங்கள் காணப்­ப­டு­கின்­றன.

இவ்­வா­றான பெண் தலை­மைத்­துவ குடும்­பங்­களில் பெரும்பாலானவர்கள் தமது அன்றாட வாழ்வாதார செயற்பாடுகளுக்கு பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.