Breaking News

வாகன நெரிசல் காரணமாக நீதிமன்றத்துக்கு வர முடியாமல் போனது-ஞானசார தேரர்

கொழும்பில் நேற்று முன்னெடுக்கப்பட்ட புதிய போக்குவரத்து ஒழுங்கு காரணமாக ஏற்பட்ட வீதி நெரிசலில் நீதிமன்றத்துக்கு வருகைதர ஐந்து நிமிடங்கள் தாமதமாகியதாகவும் இதனாலேயே நீதிமன்றத்தில் ஆஜராக முடியாமல் போனதாகவும் பொதுபல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் விளக்கமளித்துள்ளார்.

தனக்கு நீதிமன்றத்தில் ஆஜராவதை விட்டும் தவிர்ந்து கொள்வதற்கு எந்தத் தேவையும் இல்லையெனவும் நேற்று ராஜகிரிய பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட புதிய போக்குவரத்து ஒழுங்கு காரணமாக வாகன நெரிசல் காணப்பட்டதாகவும் இதனாலேயே தாமதமாகியதாகவும் தேரர் இன்றைய தேசிய சிங்கள ஊடகமொன்றுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.