Breaking News

ஈராக்கில் ஐ.எஸ் இயக்கத்தின் தளபதிகள் பலர் பலி

ஈராக் போர் விமானங்கள் மேற்கொண்ட வான் தாக்குதலில் ஐ.எஸ் இயக்கத்தின் முக்கிய பல தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத் தளபதிகள் பங்கேற்கும் முக்கிய கூட்டம் ஒன்று ஈராக்கில் அன்பார் மாகாணத்தில் உள்ள கர்பலா நகரில் நடைபெறுவதாகவும், இதில் கலந்து கொள்வதற்காக ஐ.எஸ் இயக்கத்தின் பல தலைவர்கள் வந்திருப்பதாகவும் ஈராக்கிய படைகளுக்கு தகவல் கிடைத்தது. 

இதைனையடுத்து ஈராக் போர் விமானங்கள் குறித்த கூட்டம் நடந்ததாக கூறப்படும் வீடுகள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளன. இந்த தாக்குதல் சம்பவத்தில், ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் தளபதிகள் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். 

எனினும் இந்த தாக்குதலில் ஐ.எஸ் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அல் பகாதியின் கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை. சம்பவ இடத்தில் இருந்து அவரை இரகசியமான இடத்துக்கு தீவிரவாதிகள் அழைத்து சென்றுள்ளதாக ஈராக் இராணுவம் கூறுகிறது.