Breaking News

ஜனாதிபதி நாளை தாய்லாந்து விஜயம்



இலங்­கைக்கும் தாய்­லாந்­துக்­கு­மி­டையில் இரா­ஜ­தந்­திர உற­வுகள் ஏற்­ப­டுத்­தப்­பட்டு 60 ஆவது ஆண்டு நிறை­வ­டை­வதை முன்­னிட்டு ஒழுங்­கு­செய்­யப்­பட்­டுள்ள விழாவில் பங்­கு­பற்­று­வ­தற்­காக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நாளை தாய்­லாந்­துக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­ம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த விஜ­யத்­தின்­போது இரு நாடு­க­ளுக்­கி­டை­யி­லான இரா­ஜ­தந்­திர உற­வுகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டதைக் குறிக்கும் முக­மா­கவும் இலங்கை மற்றும் தாய்­லாந்­துக்­கி­டை­யி­லான சமய உற­வு­களைப் பலப்­ப­டுத்தும் முக­மா­கவும் மஹி­யங்­கனை ரஜ­மஹா விகா­ரை­யி­லி­ருந்து புனித தந்தம் எடுத்துச் செல்­லப்­பட்டு தாய்­லாந்து புத்­த­மொந்­தோனில் காட்­சிப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.

நவம்பர் மாதம் 02 ஆம் திகதி ஆரம்­பித்­து­வைக்­கப்­படும் இந்த நிகழ்வு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி வரை இடம்­பெ­ற­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

மஹி­யங்­கனை ரஜ­ம­ஹா­வி­கா­ரையின் பிர­தம தேரர் உரு­ல­வத்தே தம்­ம­ர­கித தேரர் தலை­மை­யி­லான 60 பிக்­கு­களைக் கொண்ட ஒரு குழுவும் தாய்­லாந்­துக்­கான இந்த விஜ­யத்தில் ஜனா­தி­ப­தி­யுடன் இணைந்து கொள்­ள­வுள்­ளது