சிம்பு வாழ்வை திருப்பிப்போட்ட நாள்! - THAMILKINGDOM சிம்பு வாழ்வை திருப்பிப்போட்ட நாள்! - THAMILKINGDOM
  • Latest News

    சிம்பு வாழ்வை திருப்பிப்போட்ட நாள்!



    சிம்புவை சுற்றி என்றும் ஒரு வகையாக சர்ச்சைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். இவர் இதுவரை நடித்த படங்களில் வெற்றி படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

    ஆனால், இன்றளவும் சிம்புவிற்காக கிரேஸ் குறையவே இல்லை, இதற்கு முக்கிய காரணம் இவரின் விண்ணை தாண்டி வருவாயா படமும் கூட.

    இப்படத்தில் இதுவரை ஆட்டம், பாட்டம், அடிதடி, என பார்த்து வந்த சிம்பு சாதாரண இளைஞனாக ஒரு சாந்தமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

    அதிலும் இவருக்கும் த்ரிஷாவிற்குமான கெமிஸ்ட்ரி நிஜ காதலர்களை பொறாமை பட வைத்தது. அந்த அளவிற்கு இப்படத்தில் இவர்கள் காதல் காட்சிகள் அமைந்திருக்கும்.

    படத்தை பார்த்த பலரும் கார்த்திக், ஜெஸ்ஸியை கைப்பிடிப்பானா என்று காத்திருந்து ஏமாற்றத்துடன் வெளியேறினாலும், அந்த பாதிப்பு தான் இத்தனை வருடம் கடந்தாலும் அப்படத்தை பற்றி பேச தூண்டுகிறது.

    இப்படம் இதே நாள் 2010ம் ஆண்டு வெளிவந்தது குறிப்பிடத்தக்கது, இதை வழக்கம் போல் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: சிம்பு வாழ்வை திருப்பிப்போட்ட நாள்! Rating: 5 Reviewed By: Tamilkingdom
    Scroll to Top