பங்களாதேஷ் அணி வெற்றி
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு மிர்புரில் அரங்கேறிய 3வது லீக் போட்டியில் பங்களாதேஷ் - ஐக்கிய அரபு இராஜ்ஜியம் ஆகியன மோதின.
நாணய சுழற்சியில் வென்ற ஐக்கிய அரபு இராஜ்ஜிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்ககளை இழந்து 133 ஓட்டங்களை எடுத்தது.
அடுத்து களம் இறங்கிய ஐக்கிய அரபு இராஜ்ஜிய துடுப்பாட்ட வீரர்கள் பங்களாதேசின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 17.4 ஓவர்களில் 82 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.
இதன் மூலம் பங்களாதேஷ் 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முதலாவது வெற்றியை பெற்றது.