Breaking News

சம்பந்தன் இராணுவத்திடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்



தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற எதிர்க் கட்சித் தலைவருமான ஆர். சம்பந்தன் இலங்கை இராணுவ அதிகாரிகளிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

ஆர். சம்பந்தன் கிளிநொச்சியிலுள்ள பரவிபச்சான் இராணுவ முகாமில் பலவந்தமாக நுழைய முற்பட்டமையை தான் வன்மையாக கண்டிப்பதாக ஓமல்பே சோபித்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பாராளுமன்றத்தில் முக்கிய பதவியை வகிக்கும் ஆர்.சம்பந்தன் நாட்டில் சமாதானத்தை விரும்பும் அனைவரும் வெறுக்கும் ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.