சம்பந்தனை உடன் கைது செய்க..!!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனை உடன் கைது செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
இராணுவ முகாமொன்றுக்குள் பலவந்தமாக நுழைய முற்படுவது சட்ட முரணான ஒன்றாகும். அரசாங்கம் இது தொடர்பில் உடனடியாக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம். முஸாம்மில் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ முகாமுக்குள் பலவந்தமாக நுழைய முற்பட்ட நடவடிக்கையானது, வட மாகாணத்திலுள்ள இராணுவ பாதுகாப்பு முகாம்களை பலவீனப்படுத்தும் ஒரு தந்திரமேயாகும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.








