ரஷ்ய ஹோட்டல் மலசல கூடத்தில் ஒபாமாவும், அமெரிக்க கொடியும்
ரஷ்யாவின் கரஸ்நோயார்க்ஸ் நகரில் கடந்த வாரம் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பெயரில் புதிதாக ஹோட்டல் ஒன்றை திறந்துள்ளனர்.
இந்த ஹோட்டலின் உரிமையாளர் அமெரிக்காவை ஆத்திரமூட்டும் வகையில் ஏற்பாடு செய்துள்ள அம்சங்கள் தற்பொழுது ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஹோட்டலின் மலசல கூடத்துக்கு போடப்பட்டுள்ள கால் துடைக்கும் பாபிசுக்கு அமெரிக்க கொடியை அச்சிட்டுள்ளனர்.
அத்துடன், இந்த ஹோட்டலின் மலசல கூடத்தில் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டுள்ள “டொய்லட் பேப்பர்ஸ்ஸுக்கு” அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமாவின் புகைப்படத்தை அச்சிட்டுள்ளனர்.
இது தொடர்பில் அமெரிக்காவுக்குள் பெரும் பரபரப்பும், மக்கள் மத்தியில் பெரும் குரோதமும் எழுந்துள்ளதாக சர்வதேச செய்திகள் குறிப்பிடுகின்றன.










