Breaking News

பிரதமரின் கருத்துக்கு சம்பந்தன் அதிருப்தி

ஸ்ரீலங்காவின் உள்நாட்டுப்போரின் இறுதிக் காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்படவுள்ள பொறிமுறைகளில் சர்வதேச நிதிபதிகள் எவரும் இடம்பெறமாட்டார்கள் என பிரதமர் தெரிவித்துள்ள கருத்துக்கு எதிர்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.


ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் 2015 இல் ஸ்ரீலங்கா தொடர்பில் வலுரவான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவதற்கு உறுப்பு நாடுகள் திட்டமிட்டிருந்த போதிலும், அரசு சாதகமான நோக்கங்களை வெளிப்படுத்தியதன் பின்னர், நீத்துப்போன தீர்மானமே நிறைவேற்றப்பட்டது.

இதே ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்றுமாறு அரசை கேட்டுக்கொள்கின்றோம்.

இந்த விடயம் தொடர்பில் எந்தவித புரிந்துணர்வின்மைக்கும் இடமில்லை எனவும், ஸ்ரீலங்கா அரசு அமைக்கவுள்ள காணாமற்போன விவகாரங்களைக் கையாள்வதற்கான அலுவலகம் குறித்த முழுமையான விடயங்களை தாங்கள் இதுவரை அறியவில்லை என சம்பந்தன் தெரிவித்துள்ளார்.