Breaking News

உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர் யார் தெரியுமா?

வீராட் கோஹ்லி உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர் என அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜெஃப் லாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.


மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜெஃப் லாசன் கலந்துகொண்டார்.

அதன்பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஜெஃப் லாசன், அவுஸ்திரேலியாவில் உள்ள எகிரும் வகையிலான பிட்சுகளில் வேகப்பந்து வீச்சாளர்களைத் திறம்பட சமாளிக்கும் துடுப்பாட்டகாரர்களில் குறிப்பிடத்தக்கவர் கோஹ்லி என்று தெரிவித்தார்.

மேலும், இந்திய அணி கடந்த 2011-ல் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டபோதிலிருந்தே வீராட் கோஹ்லியைக் கவனித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், கோஹ்லி ஃபார்ம்-மின் உச்சத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

ஐபிஎல் போன்ற தொடர்களில் கோஹ்லிக்கு பந்து வீசுவது சவாலானது. அவரை அவுட் ஆக்குவதும் கடினம். எனவே கோஹ்லிக்கு பந்துவீச நான் விரும்ப மாட்டேன்.

இதனால், பெங்களூரு அணியின் மற்ற முன்னணி துடுப்பாட்டகாரர்களான டிவில்லியர்ஸ் மற்றும் ஷேன் வாட்சன் ஆகியோரை விரைவில் வெளியேற்ற முயற்சிக்க வேண்டும் என்றும் ஜெஃப் லாசன் கூறியுள்ளார்.