Breaking News

பொருளாதார மத்திய நிலையத்தை தாண்டிக்குளத்தில் அமைக்குமாறு கோரி பேரணி



பொருளாதார மத்திய நிலையத்தை தாண்டிக்குளத்தில் அமைக்குமாறு கோரி பேரணி ஒன்றுமுன்னெடுக்கப்பட்டது.

அபிவிருத்தியில் அரசியல் கலக்காதே, எமது பிரச்சினை மாவட்டத்தின் அபிவிருத்தியே,சந்தை வாய்ப்பில்லாமல் நாம் படும் துன்பம் தெரியுமா? போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை பேரணியில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

பேரணியில் கலந்துகொண்டவர்கள் மாவட்ட செயலகத்திற்கு சென்று அங்கு மாவட்ட அரசாங்க அதிபர் ரோகண புஸ்பகுமாரவிடம் முதலமைச்சர் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு வழங்குவதற்காக மகஜர்களையும்கையளித்தனர்.

பேரணியில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரான சி.சிவமோகன், முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், ஐக்கிய தேசியக் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் கருணாதாச மற்றும்வவுனியா மாவட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மரக்கறி உற்பத்தியாளர்கள், உள்ளூர் விளைபொருள் விற்பனையாளர்கள் சங்க பிரதிநிதிகள், வவுனியா வர்த்தக சங்க தலைவர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.