Breaking News

ஜே.வி.பியில் குழப்பம் – தலைவர் பதவியை துறக்கும் அநுர?



மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படலாம் என்றும், தற்போதைய தலைவரான அநுரகுமார திஸாநாயக்க தமது தலைவர் பதவியினை மற்றொருவருக்கு கொடுக்கவுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியில் மீண்டும் தலைமைத்துவம் தொடர்பில் நெருக்கடி நிலையொன்று தலைதூக்கியுள்ள நிலையில், தலைமைத்துவ மாற்றம் ஏற்படலாம் என்று கூறப்படுகின்ற போதிலும் அதனை உறுதிப்படுத்த முடியாதுள்ளது.

கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் நடவடிக்கை தொடர்பில் கட்சியின் அரசியல்சபை உறுப்பினர்களிடையே எழுந்துள்ள சந்தேகங்கள் இந்த முரண்பாட்டுக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுவதுடன், அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக பல்வேறு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கட்சியின் தலைமைத்துவம் உடன் மாற்றப்பட வேண்டும் என அதிருப்தியாளர்கள் கோரியுள்ள நிலையில், அடுத்த தலைமைத்துவத்துக்கு தொழிற்சங்கத் தலைவர் லால் காந்தவின் பெயரும், கட்சியின் செயலாளர் ரில்வின் சில்வாவின் பெயரும் முன்மொழியப்பட்டுள்ளன.

இந்நிலையில் இவ்விருவரில் ஒருவர் அடுத்த தலைவராக தெரிவு செய்யப்படலாம் என்றும் கூறப்படுகின்றது. கட்சியின் உள்ளக தகவல்களின் படி, கடந்த நாட்களில் அனுர குமார திஸாநாயக்க திடீரென அயர்லாந்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டமை இந்த முரண்பாட்டுக்கு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகின்றது.