மஹிந்தவிற்கான இராணுவ பாதுகாப்பு நீக்கம்:கூட்டு எதிர்கட்சி கண்டனம்
மஹிந்த ராஜபக்சவிற்கு வழங்கப்பட்டுள்ள இராணுவ பாதுகாப்பை நீக்கும் தீர்மானத்திற்கு கூட்டு எதிர்கட்சி கண்டனம் வெளியிட்டுள்ளது.
அசாதாரண சூழ்நிலைகள் காணப்படுவதால் அதிமுக்கியவத்துவம் வாய்ந்தவர்களுக்கான பாதுகாப்பு ராஜபக்சவிற்கு வழங்கப்பட வேண்டும் என கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலை புலிகளை அழித்தமைக்காக ராஜபக்சவை பழிவாங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எழுத்துமூலம் கூட்டு எதிர்கட்சி அறிவித்துள்ளதாக தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.நியாயமற்ற பழிவாங்கல் செயற்பாடுகள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.







