Breaking News

அரச பாடசாலைகளை காலை 9 மணிமுதல் மாலை 3 மணிவரை நடத்த கோரிக்கை



நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலையிலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் பொருட்டு சகல அரச பாடசாலைகளையும் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரையில் நடாத்துவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது.

கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் கல்வி அமைச்சிடம் இந்த யோசனையை முன்வைத்துள்ளனர்.

தற்போதை நிலையில் நண்பகல் 12.00 மணியுடன் பாடசாலை விடுவது மிக மோசமான ஒரு நிலையாகும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் நலின்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சூடான காலநிலையின் போது குளிரான பானங்களை குடிப்பது உகந்ததல்ல என்றும், சீனி அதிகம் கலக்கப்பட்ட நீர் வகைகளை அருந்தக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.