Breaking News

விமல் வீரவங்ச விரைவில் கைது?



தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்சவுக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு சட்ட மா அதிபர் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி போலியான கடவுச் சீட்டு வைத்திருந்தமை, அதனைப் பயன்படுத்தி வெளிநாடு செல்ல முற்பட்டமை என்பன குற்றவியல் சட்டத்தின் கீழும் குடிவரவு குடியகல்வு சட்டத்தின் படியும் வழக்குத் தொடர முடியுமான குற்றங்கள் என சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த அனுமதியின் பிரகாரம், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் எதிர்வரும் நாட்களில் கொழும்பு பிரதான மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் விமல் வீரவங்சவுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.