எழுக தமிழ் தொடர்பில் மா,சு,ஆ மும்முனை தாக்குதல் (காணொளி) - THAMILKINGDOM எழுக தமிழ் தொடர்பில் மா,சு,ஆ மும்முனை தாக்குதல் (காணொளி) - THAMILKINGDOM
 • Latest News

  எழுக தமிழ் தொடர்பில் மா,சு,ஆ மும்முனை தாக்குதல் (காணொளி)

  வரலாறு காணாத பெரு வெற்றி பெற்ற நிகழ்வில்
  முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு அம்சத்தை சுட்டிக்காட்டி நீண்ட விவாதம் ஒன்று நேற்று இடம்பெற்றது.

  கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற எழுக தமிழ் நிகழ்வில் பெருந்திரளாக மக்கள் கலந்துகொண்டிருந்தமை தொடர்பில் மிகுந்த கவலையில் இருந்த தமிழரசுக்கட்சியினருக்கு முதலமைச்சரை எவ்வாறேனும் குற்றம் காண்பதற்கு கோப்புக்களை ஆராயும் வேலையில் இறங்கியிருந்தது.

  இதில் கலந்துகொண்ட சுமந்திரன் முதலமைச்சர் எழுகதமிழ் நிகழ்வில் கேரைதீவில் உப்பளம் அமைப்பது தொடர்பில் மாகாணசபைக்கு தெரியாது எனத்தெரிவித்திருந்தார். அதனை ஒரு பெரிய பிரச்சனையாக்கிய சுமந்திரன் மற்றும் மாவை,ஆனஸ்ட் ஆகியோர் அந்த காணி மாகாணசபையூடாகவே வழங்கப்பட்டிருக்கலாம் என்றும் அவ்வாறாயின் எப்படி முதலமைச்சர் பகிரங்க கூட்டத்தில் மத்திய அரசை குற்றம் சாட்ட முடியும் என்றும் அதற்கான பதில் தனக்கு இந்த கூட்டத்திலேயே வழங்கப்பட வேண்டும் என்றும் முரண்டுபிடித்தார்.  இதற்கு பதிலளித்த முதலமைச்சர் இது தொடர்பில் மக்களால் முறையிடப்பட்டுள்ளது அதற்கான காணி யார் ஒதுக்கியது என்பது தொடர்பான விடயம் தற்போதைக்கு தன்னிடம் இல்லை அதுதொடர்பில் ஆராய்து பதிலளிப்பதாக சொல்ல அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அப்படியானால் எப்படி பகிரங்க கூட்டத்தில் தெரியாது என முதலமைச்சர் சொன்னார் என்றும் அவ்வாறு முதலமைச்சர் சொன்னது பாரிய பிழை என்றும் ஒப்பந்தகாரரால் தாமதிக்கமுடியாது எனவும் அந்த ஒப்பந்த காரர் சார்பில் வாதாடினார் சுமந்திரன்.  அதற்கு பதிலளித்த பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அடுத்த கூட்டத்தில் பதிலாதாடிக்ளிகொப்பதாக சொல்ல இல்லை இது மிகப்பெரிய பிழை என தொடர்ந்தும் வாதாடிக்கொண்டிருந்தார்.

  இதில் கருத்து தெரிவித்தமாவை வரும் திட்டங்களை கண்ணை மூடிக்கொண்டு அறையில் இருந்துகொண்டு அவற்றை நிராகரிக்கமுடியாது என்றும் சம்பூர் நிலமையும் அப்படித்தானாம் அதுதொடர்பில் சம்பந்தனிடம் உரையாடியதாகவும் தெரிவித்தார்.

  கூடங்குளம் அனல்மின்நிலையம்கூட அமைப்பதில் தப்பில்லை என அறிஞர்கள் சொல்லியுள்ளனர் எனவே வரும் திட்டங்களை எதிர்க்கமுடியாதா எனவும் முதலமைச்சரை குற்றம்சாட்டினார்.

  இந்த விடயம் தொடர்பாக கடந்தவாரம் நடந்தவை

  தொடர்புடைய செய்தி

  வெளியில கலைச்சு போடுவன்- கூட்டத்தில் சுமந்திரன் அடாவடி!(காணொளி)  முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: எழுக தமிழ் தொடர்பில் மா,சு,ஆ மும்முனை தாக்குதல் (காணொளி) Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top