விரைவில் மக்கள் பார்வைக்கு, விடுதலைப் புலிகளின் போர்த் தளபாடங்கள்! - THAMILKINGDOM விரைவில் மக்கள் பார்வைக்கு, விடுதலைப் புலிகளின் போர்த் தளபாடங்கள்! - THAMILKINGDOM
 • Latest News

  விரைவில் மக்கள் பார்வைக்கு, விடுதலைப் புலிகளின் போர்த் தளபாடங்கள்!  முல்லைத்தீவு மந்துவில் இராணுவக் காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகளின் போர்த்தளபாடங்கள் அனைத்தும் கடந்த மாதம் 24ஆம் திகதி இராணுவத்தினரின் அதிவேக செயற்பாட்டின் மூலம் அங்கிருந்து அகற்றப்ப ட்டுள்ளன.

  குறித்த காட்சியகத்தில் புலிகளினால் தயாரிக்கப்பட்ட போர்ப் படகுகள் மற்றும் கனரக ஆயுதங்களே அதிகம் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை பார்ப்பதற்கு தெற்கில் இருந்து அதிகளவிலான சிங்கள மக்கள் வந்து செல்வது வழக்கமாக இருந்தது.

  இந்நிலையில் குறித்த மக்களின் நன்மை கருதி காட்சியறையை மீளவும் கட்டுவதற்கு இராணுவத்தினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  குறித்த காட்சியறையை வலைஞர்மடம் புதுமாத்தளன் பிரதேச பகுதிகளில் மீளவும் அமைப்பதற்கு முன் ஏற்பாடுகள் அதிதீவிரமாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: விரைவில் மக்கள் பார்வைக்கு, விடுதலைப் புலிகளின் போர்த் தளபாடங்கள்! Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top