Breaking News

ரவிராஜ்சிற்கு சொந்தகாசில் சூனியம் வைத்த சுமந்திரன் (படங்கள்)


சாவகச்சேரியில் மறைந்த மாமனிதர் நடராஜா
ரவிராஜ் அவர்களுக்கு சுமந்திரன் தனது சொந்தப்பணத்தில் சிலை நிறுவியதாக தமிழரசுகட்சியால் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு நேற்று சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ளதோடு வழமை போலவே விடுதலைப்போராட்டத்தையும் தமிழீழ விடுதலைப்புலிகளின் கொள்கைகளையும் எதிர்த்துவரும் த.தே.கூட்டமைப்பு பேச்சாளர் சுமந்திரன் திட்டமிட்டு மாமனிதர் ரவிராஜ் இற்கு தமிழீழ தேசியத்தலைவர்  மேதகு பிரபாகரன் அவர்களால் வழங்கப்பட்ட மாமனிதர் பட்டத்தை நீக்கி அமரர் ரவிராஜ் என்று கல்வெட்டு பொறித்து சிலைநிறுவி தனது மனநிலையை மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.

இந்த நிகழ்வு சுமந்திரனின் உதவியாளர்களில் ஒருவரான மாகாணசபை உறுப்பினர் சயந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றதோடு அதில் சம்பந்தன் சிங்கள அமைச்சர் ராஜித சேனாரத்தின ஆகியோரின் வருகையோடு நடைபெற்றுள்ளது.



சிலைநிறுவி தான் தேசியவாதியாக காட்ட முயன்ற மறைமுக அரசியலை புரிந்துகொண்ட வடமாகாண முதலமைச்சர் மற்றும் த.தே.ம.முன்னணி தலைவர் ஆகியோர் இந்த நிகழ்வை புறக்கணித்திருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

அத்தோடு இதற்கு அழைக்கப்பட்ட சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்தின நேற்று காலை வவுனியாவில் இடம்பெற்ற சிங்கள குடியேற்ற கிராமமொன்னை ஆரம்பித்து வைத்துவிட்டு மாலை ரவிராஜ்சின் நினைவு தினத்தில் கலந்துகொண்டிருந்தார் என ஏற்கனவே தமிழ்க்கிங்டொம் சுட்டிக்காட்டியிருந்தது என்பதை அறியத்தருகின்றோம்.

நிரந்தரமாக அமையப்போகும் சிலையில் கூட மாமனிதர் என்ற வார்த்தையை திட்டமிட்டே தவிர்த்தது, புலிகள் பற்றிய ஞாபகத்தை அழிக்கிறதுக்கு முண்டியடிக்கிறது சிறிலங்கா அரசாங்கமும் டக்ளஸ் போன்ற துணை இராணுவக்குழுக்களும் மட்டும் இல்லை என்பதை இவ்விடயம் தெளிவாக காட்டுவதாக வைத்திய கலாநிதி ஒருவர் வானொலி செவ்வி ஒன்றில் தெரிவித்திருந்தமையையும் சுட்டிக்காட்டுகின்றோம்.

தமிழ் மக்களின் உரிமைக்காக குரல்கொடுத்த மாமனிதர் நடராஜா ரவிராஜ் கொழும்பு நரகேன் பிட்டியில் 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதி இனந்தெரியாத நபர்களினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அந்நாளை நினைவுகூரும் முகமாக சர்வமத வழிபாட்டுடன் இன்று அவரது சிலையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண, நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண ஆகியோர் இணைந்து திறந்துவைத்தனர்.


காலையில் சிங்கள குடியேற்றத்தை ஆரம்பித்தவர் மாலையில் யாழில் தேசியம்(படங்கள்)


முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்