எமக்கு வீடு வேண்டாம் நீதியே வேண்டும்- படுகொலையான மாணவனின் பெற்றோர் (காணொளி)
பொலிஸாரினால் சுட்டுப் படுகொலை செய்யப்படட
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவருக்கான நட்டஈட்டை இன்னும் இரண்டு வாரங்களில் அவர்களது பெற்றோருக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் உறுதியளித்துள்ளார்.
குறித்த மாணவர்கள் இருவரது குடும்பத்தினருக்கு வீடுகள் அமைத்துக் கொடுப்பதாக அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்த போதிலும் தங்களுக்கு நீதியே வேண்டும் என்ற கோரிக்கையை பாதிக்கப்பட்ட பெற்றோர் அமைச்சரிடம் ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளனர்.
எமக்கு வீடு தேவையில்லை நான் ஐந்து பிள்ளைகளோடு இன்றுவரை எமது சொந்த முயற்சியிலேயே வாழ்க்கை நடாத்தி வருகின்றோம் நீங்கள் இராணுவத்தாலோ அல்லது பொலீசாராலோ வீடமைத்து தருவீர்கள் அது எமக்கு தேவையில்லை எமக்கு பறிகொடுத்த மகனுக்கு நீதி தேவை அதற்காகவே இங்கு வந்துள்ளேன் என படுகொலைசெய்யப்பட்ட மாணவனின் தந்தையார் அமைச்சருக்கு நேரிலையே தெரிவித்துள்ளார்.

முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்