வெளிநாட்டில் வாழ்வோருக்கு வாக்களிக்கும் வாய்ப்பளிப்பது குறித்து ஆராய்வு
வேலைவாய்ப்பு மற்றும் இதர காரணங்களுக்காக வெளிநாடுகளில் வாழும் இலங்கையர் அங்கிருந்தவாறே தேர்தலில் வாக்களிப்பதற்கான வாய்ப்பை உருவாக்குவது குறித்து ஆராய பாராளுமன்ற குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோறள தலைமையிலான குழு இது குறித்து ஆராய்து அறிக்கை சமர்ப்பிக்கும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி உட்பட சில அமைப்புகள் இது குறித்து கோரிக்கைகளை முன் வைத்து வந்திருந்தமை நினைவூட்டத்தக்கது.








