பிக்குகள் நினைத்தபடி ஆட முடியாது; நீதியமைச்சர்!
நல்லாட்சி அரசிலேயே அதிகமான பௌத்த துறவிகள் சிறைப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கைதானவர்கள் எல்லோரும் யார்? என்பது தொடர்பில் முதலில் அவதானித்துப் பாருங்கள்.
அவ்வாறு சிறைப்படுத்தப்பட்டவர்கள் பெரும்பாலும் பாலியல் துஷ்பிரயோகம், மோசடி மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களே தவிர ஒழுக்கமான பௌத்த துறவிகள் இல்லையென விளக்கமளித்துள்ளார் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச.
கடந்த ஆட்சியில் பிரதமரின் அலுவலகத்துக்குள் புகுந்து தளபாடங்களை உடைத்தெறியும் அளவுக்கு தீவிரவாத பௌத்த பிக்குகள் வளர்ந்திருந்ததாகவும் அவ்வாறான சூழ்நிலையை நல்லாட்சி ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லையெனவும் தெரிவித்துள்ள அவர், சட்டம் யாராக இருந்தாலும் தனது கடமையைச் செய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எந்தத் தரப்பானாலும, அடிப்படைவாதத்தைப் போதிப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நேற்றைய தினம் பாராளுமன்றில் வைத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.








