வவுனியா குற்றத்தடுப்புப் பிரிவினரால் நால்வர் கைது
குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் நால்வர் நேற்று(17) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் வவுனியா குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சந்தேக நபர்களைத் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெறுவதற்கு பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்த நபர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, செட்டிக்குளம் மற்றும் புளியங்குளம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் விசாரணைகளின் பின் சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.








