Breaking News

வடக்கு முதலமைச்சருக்கு எதிராக சிங்களத்தில் காணொளிப் பாடல்

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வ ரனை கடுமையாக தாக்கி சிங்கள மொழியிலான காணொளிப் பாடல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.


குறித்த பாடல் காணொளியில் முதலமைச்சரை போன்று வேட மணிந்த ஒருவரும், ஒரு பெண்ணும், புலி வேடமிட்ட ஒருவரும் தோன்றுகிறார்கள். இவர்கள் தோன்றும் திரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னம் போன்ற உருவம் காண்பிக்கப்படுகிறது. 

குறித்த பாடலில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் புலிகளுக்கு பால் கொடுத்து வளர்கிறார் என்றும் சமாதானத்தை பேசுவதாக கூறி இனங்களிடையே பிரிவுகளை ஏற்படுத்துவதாகவும் உலகம் முழுவதும் சுற்றி தன்னை பெரியவராக காட்டுகிறார். 

இவரை நாட்டை விட்டு விரட்டி அடிப்போம் என்ற வசனங்களுடன் இப்பாடல் காணொளியில் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் தமது பிரதிநிதியாக பெரிதும் மதிக்கும் ஒருவரை இவ்வாறு சித்திரித்து காணொளிப் பாடல் வெளியிட்டுள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் பெரும்  விசனத்தை உண்டு பண்ணியுள்ளது.