Breaking News

2017 இல் ஆட்சியை கவிழ்ப்பதே எனது திட்டம் - மஹிந்த



2017 ஆம் ஆண்டு அரசாங்கத்தை கவிழ்ப்பதே தமது இலக்கு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவில் பணியாற்றும் வெளிநாட்டு ஊடக நிறுவனங்களின் ஊடகவிலாளர்களுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

அரசியல் சாசனம் தொடர்பில் அரசாங்கம் அதன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய பின்னரே தமது நிலைமை வெளியிடவுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சீனாவிற்கு காணிகளை வழங்குவதற்கு தாம் எதிர்ப்பு வெளியிடுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இந்த சந்திப்பில் ஊடகவியலாளர்களுக்கு அப்பத்தையும் மஹிந்த ராஜபக்ச வழங்கியிருந்தார்.

ஸ்ரீலங்கா அரசியலில் அப்பம் தற்போது அடையாளப் பொருளாக மாறியுள்ளதுடன், 2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன விருந்துபசாரமொன்றில் அப்பத்தை உண்ண பின்னரே மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து வெளியேறியிருந்தார்.