முதல்ரிவரின் “வலக்கையை உடைக்க வேண்டும்” சுமந்திரன் போட்ட சதித்திட்டம் அம்பலம்!! - THAMILKINGDOM முதல்ரிவரின் “வலக்கையை உடைக்க வேண்டும்” சுமந்திரன் போட்ட சதித்திட்டம் அம்பலம்!! - THAMILKINGDOM

 • Latest News

  முதல்ரிவரின் “வலக்கையை உடைக்க வேண்டும்” சுமந்திரன் போட்ட சதித்திட்டம் அம்பலம்!!

  முதலமைச்சரை நீக்குவதற்காக நீண்டகாலமாக வடமாகாண சபை உறுப்பினர்களான கேசவன் சயந்தன் மற்றும் அயுப் அஸ்மின் ஆகியோர் திட்டமிடல் செய்தமை தற்போது ஆதாரங்களுடன் வெளிவந்துள்ளது.

  வடமாகாண சபையின் உறுப்பினரான விந்தன் கனகரத்தினம் விசாரணைக்குழுவுக்கு செய்த முறைப்பாட்டில் இவ்விடயம் உள்ளடக்கப்பட்டபோதும் விசாரணைக்குழு அதனை உள்ளடக்கியிருக்கவில்லை.  கடந்த 09 – 02 – 2016 அன்று விந்தனை சந்தித்த அஸ்மின் முதல்வர் விக்கினேஸ்வரனை விலக்கவேண்டும் என்றும் அதற்கு அவரது வலக்கையை உடைக்கவேண்டும் என ஆசனத்தின் கைப்பிடியை காட்டியுள்ளார்.

  அதன் தொடர்ச்சியாக வடமாகாண சபையின் இன்னொரு உறுப்பினரான ஜிரி லிங்கநாதனை அழைத்து உங்களுக்கு விவசாய அமைச்சராக கொண்டுவரவேண்டும் என சுமந்திரன் சேர் விரும்புகின்றார். அவர் உங்களில் நம்பிக்கை வைத்துள்ளார். எனவே இப்போது ஐங்கரநேசனுக்கு எதிராக தீர்மானத்தை கொண்டுவரவேண்டும் எனக்கேட்டார்கள்.

  இப்படித்தான் தீடிரென எந்தவித அறிவிப்பும் இன்றி தீர்மானம் கொண்டுவந்து விசாரணைக்குழுவை அமைக்கவேண்டும் என அவைத்தலைவர் சிவஞானத்துடன் சேர்ந்து திட்டமிட்டார்கள் எனவும் அதில் தெரியவருகின்றது.

  இது தொடர்பாக ஏற்கனவே தமிழ்கிங்டொம் பல தடவைகள் சுட்டிக்காட்டியிருந்தது என்பதை வாசகர்களுக்கு நினைவூட்டுகின்றோம்.

  தொடர்புடைய முன்னைய செய்திகள்


  இனவழிப்பு நடைபெற்றதற்கான ஆதாரம் இல்லை-சுமந்திரன்(காணொளி)

  இலங்கைக்கு எதிராக எந்த தீர்மானமும் வேண்டாம்-சுமந்திரன்(காணொளி)


  முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்


  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: முதல்ரிவரின் “வலக்கையை உடைக்க வேண்டும்” சுமந்திரன் போட்ட சதித்திட்டம் அம்பலம்!! Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top