ரஜனிக்காக காத்திருந்த கறுமங்கள் ஆர்ப்பாட்டம்-வா தலைவா! வா! - THAMILKINGDOM ரஜனிக்காக காத்திருந்த கறுமங்கள் ஆர்ப்பாட்டம்-வா தலைவா! வா! - THAMILKINGDOM

 • Latest News

  ரஜனிக்காக காத்திருந்த கறுமங்கள் ஆர்ப்பாட்டம்-வா தலைவா! வா!


  ரஜனிகாந் யாழ்ப்பாணம் வராததை கண்டித்து இன்று நல்லூரில் இசைக்குழு ஒன்றினது ஏற்பாட்டில் அழைத்துவரப்பட்ட சிலபொதுமக்களுக்கு பதாகைகள் கொடுக்கப்பட்டு கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

  ஏற்கனவே இந்த குழுவால் 5பேரூந்துகள் ஒப்பந்தம் செய்யப்பட்டபோதும் இறுதியில் ஒரு பேரூந்துதாதன் சம்பவ இடத்திற்கு வந்ததாக தெரியவருகின்றது.

  வீடு கிடைக்காதவர்களுக்கு வீடு பெற்றுத்தருவோம் அதனை சிலர் தடுக்கிறார்கள் எனக்கூறி மிகவும் வறியநிலையிலுள்ள மக்களை ஏமாற்றி அழைத்துவந்துள்ளதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

  எனக்கு ஒண்டும் தெரியாது மோனே! வீடு தருவாங்கள் எண்டாங்கள் அதான் வந்தம். என கீழே புகைப்படத்திலுள்ள மூதாட்டி கூறியுள்ளார்.  இதில் கலந்துகொண்டவர்கள் திருமாவளவன் மற்றும் வேல்முருகன் ஆகியோருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் எனச்சொல்லிவிட்டு வேல்முருகனுக்கு பதிலாக திருமுருகனின் படத்தை போட்டு போஸ்ரர் போடப்பட்டுள்ளதோடு. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களின் பனர்களிலும் எழுத்துப்பிழைகளை காணக்கூடியதாக இருந்தது.


  முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்


  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: ரஜனிக்காக காத்திருந்த கறுமங்கள் ஆர்ப்பாட்டம்-வா தலைவா! வா! Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top