Breaking News

விக்கியின் வீட்டில் சம்பந்தன் தலைமை அவசர சந்திப்பு

வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று முதலமைச்சரின் இல்லத்தில் இடம்பெற இருப்பதால் சம்பந்தன் மாவை உட்பட கூட்டமைப்பு பங்காளி கட்சி தலைவர்களும் படையெடுத்து வருவதாக தெரியருகின்றது.

முதலமைச்சா் விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஆகியோருக்கு இடையில் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

அண்மையில் யாழில் இடம்பெறும் வன்முறைச்சம்பவங்கள் தொடர்பாக இச்சந்திப்பில் விரிவாகக் கலந்துரையாடப்படும் என்றும் விக்கியின் கடும்போக்கை தணிக்கும் முகமாகவும் இது இருக்கலாம் எனத்தெரியவருகின்றது.

மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன் உட்பட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் ஏனைய உறுப்பினர்களும் இச்சந்திப்பில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சரின் அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.