Breaking News

முகாபேவை பதவி பறிப்பிற்கு ஜிம்பாப்வே நாடாளுமன்றம் நடவடிக்கை !

ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபேவை பதவி நீக்கத்திற்கான தீர்மானம் இன்று, செவ்வாய்க்கிழமை, தமது நாட்டு நாடாளுமன்றத்தில் முன்மொழிய வுள்ளதாகவும், இன்னும் இரண்டு நாட்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவரது பதவி பறிக்கப்படுமெனவும் அவரது கட்சியான சானு-பி.எஃப் கட்சி அறிவித்துள்ளது. 

அவர் பதவி விலக கட்சி விதித்திருந்த காலக்கெடு முடிவடைந்துள்ளதைத் தொடர்ந்து, இந்நடவடிக்கை முன்னெ டுக்கப்பட்டுள்ளது.  தனது மனைவி கிரேஸ் முகாபேவை 'அரசியல் சாசன அதிகாரத்தைக் கைப்பற்ற' அனுமதி த்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளு க்கு  ஆளாகியுள்ளார். அவரால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின் நாட்டை விட்டு வெளியேறிய, முன்னாள் துணை அதிபர் எமர்சன் மனங்காக்வாவை முகாபே சந்திப்பார் என ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.