Breaking News

விசா மறுக்கப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்காக அரசு குரல் எழுப்ப வேண்டுமாம் !

இறுதிப் போரை முன்னின்று நடா த்திய கட்டளைப் படைகளைச் சேர்ந்த சிரேஷ்ட இராணுவத் தளபதிகள் வெளிநாடு செல்வதற்கான விசா மறு க்கப்பட்ட விடயம் தொடர்பில் ஸ்ரீல ங்கா அரசாங்கம் கேள்வி கேட்க வேண்டுமென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தலைமையிலான அமைப்பு வலியு றுத்தியுள்ளது. போர்க்குற்றம் தொட ர்பான சர்வதேச நிபுணர்களே ஸ்ரீலங்கவில் போர்க்குற்றம் இடம்பெறவில்லை என்கின்ற போதிலும், அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையை ஸ்ரீலங்கா அர சாங்கம் ஜெனீவாவில் சமர்பிக்கத் தவறியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். 

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவினால் ஆரம்பி க்கப்பட்ட எளிய (எதிர்பார்ப்புக்களை ஒளியேற்றும் ஒளி) என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலா ளர் சந்திப்பு கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்றது. 

இதில் கலந்துகொண்ட ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, போர்க்குற்றச்சாட்டு என்பதை முன்வைத்து ஸ்ரீலங்கா இராணுவத்திலிருக்கும் சிரேஷ்ட அதிகாரிக ளுக்கான விசா மறுக்கப்பட்டுள்ளதை பட்டியலிட்டு தெரிவித்தார்.

“உலகப் புகழ்பெற்ற போர்க்குற்ற நிபுணர்களான சேர். டெஸ்மட் டி சில்வா, சேர் ஜெப்ரி நைஸ், மேஜர் ஜெனரல் ஜோன் ஹோம்ஸ், ரொட்னி டிக்ஸன் ஆகியோர் ஸ்ரீலங்கா போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை, உயிரிழந்தவர்களாக கூறப்படுபவர்கள், யுத்த வலயத்தில் உள்ளே இருந்தவர்கள் தெரிவித்து ள்ளனர்.

எனவே இவர்களே இதனை கூறும்போது அதன் அறிக்கைகளை ஐ.நா மனித உரிமைப் பேரவையில் முன்வைக்கவில்லை. மாறாக நாங்களே சமர்ப்பி த்தோம். இப்படிப்பட்ட எங்களையே ராஜித சேனாரத்ன இனவாத முத்திரையை பொறித்துள்ளார். 

இப்படியான நிலையிலேயே எமது சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்கு வெளி நாடுகள் சிலவற்றிற்கான விசா மறுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கவலை வெளியிட்டிருப்பதோடு மங்கள சமர வீரவோ அல்லது பாதுகாப்பு அமைச்சோ கேட்கவில்லையென்பது வெளியா கியுள்ளது. 

58ஆவது படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கிய ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்காவின் போர்க் கல்லூரிக்குச் செல்ல முடியவில்லை. 53ஆவது படைப் பிரிவு கட்டளைத் தளபதி ஜெனரல் சுதந்த ரணசிங்கவுக்கு அமெரிக்காவுக்கான விசா மறுக்கப்பட்டுள்ளது. 

அவர்கள் 30 வருடகாலமாக இருந்த ஆயுதப்போரை முடிவுக்கு கொண்டு வந்ததே அவர்கள் செய்த தவறாக கருதப்படுகின்றது. எனவே வெளி விவகார அமைச்சும், பாதுகாப்பு அமைச்சும் இது குறித்து ஜெனீவாவில் தெளிவுபெற வேண்டும். பிரிட்டன் மற்றும் அவுஸ்திரேலியாவிடமும் வினாவ வேண்டும்” என்றார்.