Breaking News

ஜனா­தி­பதி தலை­மையில் 100 சீன ஜோடி­க­ளுக்கு இலங்­கையில் திரு­மணமாம் !

இலங்கை – சீன உற­வு­ மேலும் பல­ம­டையும் வகையில் 100 சீன திரு­மண ஜோடி­க­ளுக்கு இலங்­கையில் திரு­மணம் ஈடேறவுள்ளது. 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் அவரே சாட்சிக் கையொப்­ப­மிட்டு இந்த திரு­ம­ணத்தை நடத்­தி­ வைக்­க­வுள்ளார். இலங்கை – சீன உறவில் மேலும் நெருக்­கத்தை ஏற்­ப­டுத்­தவே இந்த நிகழ்வு இடம்­பெ­று­வ­தாக அர­சாங்­கத்தின் பிர­தி­நி­திகள் அறி­வித்­துள்­ளனர். 

பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சு மற்றும் இலங்கை சுற்­று­லாத்­தறை அமைச்சு இணைந்து நேற்று பத்­த­ர­முல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்­டலில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் இவ்வாறு தெரிவித்து ள்ளார். 

மேலும் பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க செய்­தி­யா­ளர்­க­ளிடம் கூறு­கையில், இலங்கை மற்றும் சீன நாடு­களின் உறவு முறை­யா­னது மிக நீண்­ட­கால தொடர்பைக் கொண்­டது. 

இரு நாடு­களும் நல்­ல­தொரு நட்­பு­ற­வினை கையாண்டு வரு­கின்­றன. அதே போல் பெளத்த மத உற­விலும் இரண்டு நாடு­க­ளுக்குமிடையில் நெருங்­கிய தொடர்­புகள் உள்­ளன. இலங்­கை மன்­னர்கள் சீன பெண்­களை திரு­மணம் செய்து உள்ளனர். 

இந்­நி­லையில் தற்­போது இரு நாடுகள் மத்­தியில் மிகவும் நெருக்­க­மான வர்த்­தக மற்றும் வியா­பார உற­வு­முறை பல­ம­டைந்­துள்­ளன. அத்­துடன் சுற்­று­லாத்­து­றையும் மிகவும் பல­ம­டைந்து காணப்­ப­டு­கின்­றது. இலங்­கையின் சுற்­று­லாத்­து­றையில் சீன சுற்­றுலா வாசி­களின் பங்­க­ளிப்பே அதி­க­மாகும். 

உலகில் அதிக சுற்­று­லாக்­களை மேற்­கொள்ளும் நபர்­க­ளா­கவும் சுற்­றுலா செல்ல அதி­க­ளவில் செல­வீனம் செய்யும் நபர்­க­ளா­கவும் சீனர்கள் உள்­ளனர். ஆகவே இலங்­கையில் மேலும் சுற்­று­லாத்­து­றையை பலப்­ப­டுத்தும் நோக்­கத்­திலும் இரண்டு நாடு­களின் நட்­பு­றவு மேலும் பல­ம­டையும் வகை­யிலும் அடு த்த மாதம் 17 ஆம் திகதி கொழும்பு விகா­ர­மகா­தேவி பூங்­காவில் 100 சீன திரு­மண ஜோடி­க­ளுக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் திரு­மணம் நடைபெறவுள்ளது. 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே அனை­வ­ருக்­கு­மான சாட்சிக் கையொப்­பத்தை இட­வுள்ளார். இந்­திய திரு­மண தம்­ப­தி­யினர் ஆரம்­பத்தில் இருந்தே இல ங்­கையில் தமது திரு­மண நிகழ்­வு­களை முன்­னெ­டுக்கும் சம்­ப­வங்கள் முன்னெடுக்கப்பட்டவாறு உள்ளன. 

எனினும் சீனர்கள் இலங்­கையில் திரு­மணம் செய்­து­கொள்ளும் முதல் சந்­தர்ப்பம் இது­வாகும். ஆகவே 17 ஆம் திகதி காலை விகா­ர­ம­கா­தேவி பூங்­காவில் திரு­மணம் இடம்­பெ­று­வ­துடன் பின்­னி­ரவு பத்­த­ர­முல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்­டலில் இரவு விருந்து நிகழ்வும் அத­னுடன் கூடிய இசை, கலை நிகழ்­வு­களும் நடைபெறவுள்ளன. 

அத்­துடன் 17 ஆம் திக­தியில் இருந்து 22 ஆம் திகதி வரையில் அவர்கள் இலங்­கையின் புரா­தான, பாரம்­ப­ரிய, சுற்­றுலா பகு­தி­களை சென்று பார்­வை­யி­டவும் தமது திரு­மண நாட்­களை இனி­தாக கொண்­டா­டவும் சகல ஏற்­பா­டு­களும் இல ங்கை சுற்­று­லாத்­துறை அமைச்சு செய்­துள்­ளது. 

22 ஆம் திகதி மீண்டும் சீனா நோக்கி செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு ள்ளன. சீனா அரசாங்கத்தின் மூலமாக தெரிவு செய்யப்பட்ட நூறு ஜோடிகளே இவ்வாறு இலங்கையில் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர். இதில் அவர்க ளின் அரச குடும்பத்தை சேர்ந்த ஒரு திருமண ஜோடியும் உள்ளது என்பது விசேடமான அம்சமாகுமெனத் தெரிவித்துள்ளார்.