Breaking News

வடமாகாண சபையில் உள்ளவர்கள் மன்னர்களா? பத்ம உதயசாந்த குணசேகர!

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்திலிருந்து  கோரப்படுகின்ற கேள்விகளுக்கு பதில ளிக்க வடமாகாண சபை தவறி வருவதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடா ளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர குற்றம் சுமத்தியுள்ளார். 

இவ் விடயமாக சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் முறையிட்ட அவர், ஸ்ரீலங்காவிற்குள் மாகாண சபைக ளில் ஒன்றாக செயற்படும் வடமா காண சபை, ஒற்றையாட்சியை மற ந்து தனிநாடு என்ற உணர்வில் செய ற்படுவதாக பகிரங்கமாகத் தெரிவி த்தார். 

ஸ்ரீலங்கா நாடாளுமன்றம், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்றைய தினம் காலை 9.30 அளவில் கூடியது. வாய்மொழி விடைக்கான கேள்வி நேரத்தில் சபையில் எழுந்த நாடாளுமன்ற உறுப்பினர் உதயசாந்த குணசேகர, வவுனியா மாவட்டத்தில் இருக்கின்ற நீர்ப்பாசனக் குளங்களின் எண்ணிக்கை, பயிர் நிலங்களின் எண்ணிக்கை போன்ற விடயங்களை கேள்வி யாகத் தொடுத்தார்.   

விவசாய அமைச்சர் சபையில் இருக்காத படியினால் சபை முதல்வரும், அமைச்சருமான கயந்த கருணாதிலக, உரிய பதில் இதுவரை கிடைக்கப்பெற வில்லை இதற்கான கால அவகாசத்தை கோரியிருந்தார். 

இதன் காரணமாக ஆத்திரமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் உதயசாந்த குணசேகர, மாகாண சபைகளில் ஏதாகிலும் கேள்விகளை முன்வைத்தால் அதே தினத்தில் அதற்கான பதில் வழங்கப்படுகின்றது. 

ஆனால் நாடாளுமன்றத்தில் இருந்து கேள்விகளை வடமாகாண சபைக்கு அனுப்பி வைக்கின்ற சந்தர்ப்பத்தில் அதற்கான பதிலை அளிப்பதற்கு வட மாகாண சபை தவறியுள்ளது. 

ஒற்றையாட்சி நிலவுகின்ற இந் நாட்டில் புறம்பான அல்லது தனியான நாடாக வடமாகாண சபை இயங்குகின்றதே இதனூடாக புலப்படுகின்றது. நாடாளு மன்றத்திலிருந்து கேட்கப்படுகின்ற கேள்விகளுக்கு பதிலளிக்க வடமாகாண சபைக்கு முடியாது போனால் வடமாகாண சபை எதற்கு? 

மேலும் வேறு மாகாண சபைகளிடம் கேட்கின்ற கேள்விகளுக்கு உடனடியாக பதில் வழங்கப்படுகின்ற நிலையில் வடமாகாண சபையில் இருக்கின்ற அனை வரும் மன்னர்களா என விவரித்தார்.  

எனினும் இதற்கு பதிலளித்த அமைச்சர் கயந்த கருணாதிலக, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அமைச்சரது கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்த  போது தெளிவுபடுத்தல் ஒன்றை செய்த சபாநாயகர் கரு ஜயசூரிய, இன்றைய தினம் வடமாகாண ஆளுநர் நாடாளுமன்றத்திற்கு வருகை தரவுள்ளதாகவும், இதுகுறித்து அவருக்கு தெரியப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.