நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையில் ஐ.தே.க.எச்­ச­ரிக்கை.! - THAMILKINGDOM நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையில் ஐ.தே.க.எச்­ச­ரிக்கை.! - THAMILKINGDOM

 • Latest News

  நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையில் ஐ.தே.க.எச்­ச­ரிக்கை.!

  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணை க்கு ஆத­ர­வாக ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் எவ­ரா­வது வாக்­க­ளித்தால் அவர்­க­ளுக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­துடன் கட்­சியில் இரு ந்து நீக்­கப்­ப­டுவதாக என ஐக்­கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. 

  அத்­துடன் நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பு தினத்­த ன்று ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் அனை­வரும் பாரா­ளு­மன்­றத்­திற்கு வருகை தர­வேண்டும். 

  அதற்­கான ஆலோ­ச­னைகள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளதாக அக்­கட்சி தெரிவித்துள்ளதுடன்  ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­குழு கூட்டம் நேற்று சிறி­கொத்­தாவில் நடை­பெற்­றது. இக் கூட்­டத்தின் பின்னர் கட்­சியின் எம்.பி.க்கள் பலர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து வழங்கியுள்ள னா். 

  இதன்­போது கட்­சியின் பிரதி பொதுச்­செ­ய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான அகில விராஜ் காரி­ய­வசம் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற் ­கண்­ட­வாறு விவரித்துள்ளாா். 

  மேலும் விவரிக்கையில்.....

  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணை க்கு ஆத­ர­வாக ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் எவ­ரா­வது வாக்­க­ளித்தால் அவர்­க­ளுக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுத்து கட்­சியில் இருந்து நீக்­கு வோம். 

  அத்­துடன் எவரும் பிர­த­ம­ருக்கு எதி­ராக வாக்­க­ளிக்க மாட்­டார்கள். ஐக்­கிய தேசி யக் கட்­சி­யினர் அனை­வரும் பிர­த­ம­ருக்கு ஆத­ர­வா­கவே வாக்­க­ளிப்பர். ஆகவே பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை நாம் தோற்­க­டி ப்போம். இந்த வாக்­கெ­டுப்பின் போது நாட்டு மக்கள் எதிர்­பார்க்­கா­த­வர்கள் பலர் பிர­த­ம­ருக்கு ஆத­ர­வாக வாக்­க­ளிப்­பார்கள். 

  அத்­துடன் நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பு நாளன்று ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் அனை­வரும் பாரா­ளு­மன்­றத்­திற்கு வருகை தர­வேண்டும். அதற்­கான ஆலோ­ச­னை­களை நாம் வழங்­கி­யுள்ளோம் என்றார். இதன்­போது ரவி கரு­ணா­நா­யக்க எம்.பி ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை தோற்­க­டிக்க வேண்­டி­யது எமது கட­மை­யாகும். 

  அதனை நாம் செய்ய வேண்டும். ஆகவே எதிர்­வரும் நான்காம் திக­தி­யன்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை தோற்­க­டிப்­ப­தனை நாட்டு மக்கள் கண்­டுக்­கொ­ளவர். அதன்­பின்னர் எமது பலம் அதி­க­ரிக்கும். 

  அத்­துடன் மத்­திய வங்கி பிணை­முறி மோசடி நடந்­துள்­ள­தாக கூறு­கின்­றனர். அவ்­வா­றாயின் என்ன மோசடி நடந்­துள்­ளது என்­ப­தனை நிரூ­பித்து காட்­டு ங்கள். மோசடி நடந்­துள்­ள­தாக கூறு­கின்­ற­வர்கள் அதனை ஆதா­ர­பூர்­வ­மாக நிரூ ­பிப்­பது கிடை­யாது. 

  ஆகவே முன்­னைய ஆட்­சியின் போது நடந்த மோச­டிகள் குறித்து எந்­த­வொரு நட­வ­டிக்­கையும் எடுப்­ப­தாக இல்லை என்றார். அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ கருத்து வெளி­யி­டு­கையில், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை தோற்­க­டித்­ததன் பின்னர் கட்­சியில் மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்போம். 

  அத்­துடன் கட்­சியின் தலைமை பொறுப்பை ஏற்­கு­மாறு யாரும் என்­னிடம் கோர­வில்லை. இந்த பொறுப்பை ஒப்­ப­டைத்தால் உரிய வகையில் நான் செய ற்­பட தயா­ராக உள்ளேன். எனினும் தற்­போ­தைக்கு கட்சி தலைவர் ஒருவர் உள்ளார். ஆகவே அவ­ருக்கு கட்­டுப்­பட்டு நடக்க வேண்டும். 

  மேலும் தெல்தெனிய சம்பவத்திற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கதான் கார ணம் என்று கூட்டு எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா பிரேரணையில் கூறி யுள்ளனர். அப்படியாயின் நம்பிக்கையில்லா பிரேரணையை கூட்டு எதிர்க்கட் சிக்கு எதிராகவே கொண்டு வர வேண்டும். 

  ஏனெனில் தெல்தெனிய சம்பவத்தின் சூத்திரதாரியை கண்டறிய கூட்டு எதி ர்க்கட்சியினர் கண்ணாடி முன் நின்றால் உண்மை வெளியாகுமெனத் தெரி வித்துள்ளனா். 
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையில் ஐ.தே.க.எச்­ச­ரிக்கை.! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top